உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நான் கண்ட வெளிகாட்டுக் காட்சிகள் என்பதே அல்ஸ்டர் மக்களின் கருத்து. இக்கருத்து உறுதியானதற்குப் பிரிட்டிஷ் பிரிட்டிஷ் தொழிற் கட்சி பெருமையடையலாம். இந்தக் கட்சியின் அரசாட்சி யின் பொதுநலத் திட்டங்களால், வாழ்க்கை நிலை அல்ஸ்டரில் பன் மடங்காக உயர்ந்திருக்கிறது; தொழிலாளரின் நிலை முதலிடம் பெற்றுள்ளது; கட்டணமின்றி, சுகாதார வசதிகள் கிடைக்கின் றன; குழந்தைகளுக்குப் பாலும் பகலுணவும் நேரந் தவறாமல் விலையின்றி ஊட்டப்படுகின்றன. வட அயர்லாந்தில் நான் தங்கியிருந்த நாட்கள் நான் கேயாம். அதிலும் மிகக் குளிர்காலத்தில் அங்குத் தங்க நேர்ந்தது. ஆதலால், வெளியே செல்ல நடுங்கி, நாள்தோறும் பதின்மூன்றரை மணி நேரம் மின்சார நெருப்புக்குத் துணையாக அறைக் குள்ளேயே கழித்தேன். இந்நிலையில் இதைவிட அதிகமாக எப்படி எழுதமுடியும்?