உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடு ஆப்பிரிக்கா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 இந்த நிலைக்குக் காரணமாக இருப்பவர் மலாவி யின் தலைமை அமைச்சர் டாக்டர் ஹேஸ்டிங்ஸ் பண்டா. பண்டா பண்டாவுக்கு இப்போது வயது 70 இருக்கும். இவர் மணமாகா தவர். 12 வயதுச் சிறுவனாக இருந்த போது, இவர் ஓராயிரம் மைல் நடந்து சென்று, தென் ஆப்பிரிக்காவில் ஒரு பள்ளிக்கூடத்தில் படித்தார். சாப் பாட்டுச் செலவுக்கும் படிப்புச் செலவுக்கும் கூலி வேலை பார்த்துப் பொருளீட்டிக் கொண்டார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் கப்பல் செலவுக்கு மட்டும் பணம் திரட்டித் தென் ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணமானார். அங்கே, பல கல்லூரி களில் பயின்றார். பின்னர், மருத்துவக் கல்வி பெற்று டாக்டரானார். டாக்டர் பண்டா, அமெரிக்காவிலிருந்து இங்லாந் துக்குப் போய் இலண்டன்மாநகரில் டாக்டராகத் தொழில் நடத்தினார். தொழிலில் நிறைந்த பணம் திரட்டினார். ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இலண்ட னுக்கு வந்த அனைவரும் பண்டாவின் நண்பராயினர். பண்டாவுடன் நெருங்கிப் பழகியவருள் ஒருவர் கானா வின் தலைவரான என்குருமா. என்குருமா கானாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும், அவருடைய வேண்டு கோளுக்கிணங்க, டாக்டர் பண்டா கானாவில் மருத் துவத் தொழில் நடத்தினார். சில மாதங்களாயின. மாறிவரும் அரசியல் நிலை பண்டாவின் கவனத்தை ஈர்த்தது. மக்களின் உடல் நோய்களுக்கு மருத்துவம் செய்வதைக் கைவிட்டு,