உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடு ஆப்பிரிக்கா.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நாட்டு உணர்ச்சியும் புரட்சியும் தேசிய உணர்ச்சி 1920-லேயே பரவிவிட்டது. வெள்ளையர் அனைவரையும் கொல்லுவதற்கும் திட்ட மிட்டிருந்தனர். அம் முயற்சி பலன் தரவில்லை. கோவாவை, இந்தியா போர்ச்சுகல் ஆட்சியிலிருந்து விடுவித்தபோது, அங்கோலா மக்கள் மீண்டும் கிளர்ச்சி செய்தனர். 1961-ல் ஏற்பட்டது வெறும் கிளர்ச்சி யன்று; உள்நாட்டுப் போரே எனலாம். ஆப்பிரிக்கர் காப்பித் தோட்டங்களை அழித்தனர்; போர்த்துக்கீசி யரை வெட்டி வீழ்த்தினர். போர்த்துக்கீசிய அரசு கலகக்காரர்களை முழு மூச்சுடன் எதிர்த்தது. நிலையங்களை அமைத்தது. ஜெட் விமானங்களிலிருந்து குண்டு வீசிற்று. மலைநாட்டிலிருந்த ஆப்பிரிக்கரை அடியோடு அப்புறப்படுத்திற்று. அவர்களின் அடிச் சுவடே, வளமான பகுதிகளில் காண இயலாதவாறு கலகக்காரர்களை அடக்கி ஒடுக்கிற்று. 40000 பேர் கொல்லப்பட்டனர். 60,000 பேர் நாடு கடத்தப்பட் டனர். இந்த வகைகளில் 40 கோடி ரூபாய் செலவு செய்ததால், போர்ச்சுக்கலின் பொருளாதாரம் சீர் குலைந்தது. அங்கோலாவுக்கும் விமான மொசாம்பிக்கேக்கும் சுதந் திரம் வழங்கப்பட வேண்டுமென்பதை 1960 முதல் ஐக்கிய நாடுகள் அவை வற்புறுத்தியும் வலியுறுத்தியும் வருகிறது. மக்களாட்சி முறைக்கு ஏற்ப, பல முன் னேற்றங்கள் நடைபெறுவ தாக ஆண்டுதோறும் போர்ச்சுக்கல், ஐ. நா. வுக்கு அறிக்கைகள் அனுப்பி நாட்களைக் கழித்து வருகிறது. இந் நாட்டின் மூலை முடுக்குகளிலுள்ள வளமற்ற சின்னஞ்சிறு பகுதிகள் தங்களை விடுவித்துக் கொண் டுள்ளன.