இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இராமநாதபுர மாவட்டம் 1. தோற்றுவாய் இராமநாதபுர மாவட்டம் இந்தியாவெங்கும் புகழ் பெற்றது. இராமநாதபுரம் சீமை என்ற பெயர் இம் மாவட்டத்தின் பெரும் பகுதிக்கு உண்டு. இராமநாத புரம் சீமையுடன் திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்த இரு வட்டங்களைச் சேர்த்து இம்மாவட்டம் உண்டாக் கப்பெற்றது. இராமநாதபுர மாவட்டத்திற்குப் பெருமை தருவன இங்குள்ள கோவில்களும் இங்கு வாழும் மக்களின் ஆற்றலும் எனலாம். இயற்கையமைப்பாலும், இராமா யண வரலாற்றாலும், இராமேசுவரம் தீவு இந்தியா வெங்கும் இந்தியாவுக்கு அப்பாலும் புகழ் பெற்றிருக் கிறது. திரை கடலோடித் திரவியம் தேடும் மக்களும் வாணிகத்தாலும் வலிமையாலும் தொன்றுதொட்டுச் சிறப்புப் பெற்றுள்ள மக்களும் இந்த மாவட்டத்திற்குப் புகழைத் தந்திருக்கின்றனர். 'தமிழ் கண்டதோர் வைகை'யாறு கடலைமுகப்பது இந்த மாவட்டத்தில்தான். இதனால் இம்மாவட்டத்திற்கு