10 முகவை மாவட்டம்' என்ற பெயரும் நிலவி வருகிறது. தமிழிலக்கியங்கள் குறிப்பிடும் ஐவகை நிலமும் உடையது இராமநாதபுர மாவட்டம். இம் மாவட் டத்தின் எண்ணற்ற பல பெருமைகளையும் தனிச் சிறப் புக்களையும் இந்த முதற் கட்டுரையில் சுட்டிக் காட்டு வோம். ஐவகை நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை நிலத்தைப் பழந்தமிழர் ஐவகைப் படுத்தினர். என உள்ளன. குறிஞ்சி:- இம்மாவட்டத்தின் மேற்குப்பகுதியிலும் வடகிழக்குப் பகுதியிலும் உயர்ந்த மலைகள் ஸ்ரீ வில்லிபுத்தூர் வட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை விரிந்து பரந்து உளது. இது தமிழ் நாட்டிற்கும் கேரளத் திற்கும் எல்லையாக உளது. மேற்குத் தொடர்ச்சி மலை யைச் சேர்ந்த சில குன்றுகள் அப்பகுதியில் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்த சதுரகிரி சுந்தர மகாலிங்கமலை இம் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற யாத்திரைத் தலங்களுள் ஒன்றாகும். மேற்குத் தொடர்ச்சி மலை 3500 அடி (ஏறத்தாழ 1100 மீட்டர்) உயரம் வரை உளது. திருப்பத்தூர் வட்டத்தில் பாரி வள்ளலால் புகழ் பெற்ற பரம்புமலை, பிரான் மலை என்னும் பெயருடன் விளங்குகிறது. இதன் உயரம் 2000 அடி (ஏறத்தாழ 600 மீட்டர்) அளவினது. இந்த மலையின் தொடர்ச்சி எனச் சொல்லத் தக்க வகையில் சில மைல் இடைவெளி விட்டு காஞ்சாத்து மலை, திருக்கோளக் குடிமலை, வேலங் குடிக் குன்றுகள், குன்றக்குடி மலை, குடைவறைக்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/12
Appearance