கோவில் உள்ள உள்ளன. 11 பிள்ளையார்பட்டி மலை ஆகியவை மாவட்டத்திற்கும் பறம்பு மலை, இராமநாதபுர திருச்சி மாவட்டத்திற்கும் மதுரை மாவட்டத்திற்கும் எல்லையாக அமைந்திருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள ஐயனார் அருவி சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. குறிஞ்சி நிலத்தின் இயல்பைக் குறிப்பிடும் வகையில் வற்றாயிருப்புக்கு அருகேயுள்ள திருவண்ணாமலை, குருவிப் பாறை, குன்னூர், சதுரகிரி, சிறுமலை, வழுக்குப்பாறை, தாணிப்பாறை என்னும் ஊர்களும் தம் திருப்பத்தூர் வட்டத்தில் பிரான்மலை, அரளிப் பாறை, பூலாங் குறிச்சி, செட்டி குறிச்சி, குன்றக்குடி போன்ற ஊர்களும் இருக் கின்றன. முல்லை:- முல்லை நிலத்திற்கு மேற்கோளாகத் திருப்பத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டங்களில் மலையோர மாகக் காடுகள அமைந்துள்ளன. இம்மாவட்டத்தைச் சேர்ந்த தீவுகளிலும் காடுகள் உள்ளன. பொதுப் படை யாகக் கூறுமிடத்து இம்மாவட்டத்தில் காட்டு வளம் குறைவு. தீவுப்பகுதிகளிலும் கடலோரங்களிலும் 'காடாரம் பம்' எனப்படும் புதர்கள் உள்ளன. பல நூற்றாண்டு களுக்குமுன் இம்மாவட்டத்தில் காடுகள் நிறைந்திருந் தன என்பது கானாடுகாத்தான், கானப்பேர் (காளையார் கோவில்) என்ற ஊர்ப் பெயர்களாலும், 'காடு வெட்டி நாடாக்கிக் கடிய நிலந்திருத்தி' என்ற பாடுவார் முத்தப்ப செட்டியார் பாடலாலும் தெரியவரும். திருவாடானை வட்டத்தில் கடலோரப் பகுதிகளில் எப்பக்கம் திரும்பினாலும் உடை மரங்கள், முட்செடிகள்,
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/13
Appearance