உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மானின் : குளம்பன்ன பிளவுகொண்ட இலையுடைக் கடலாரைக் கொடிகளையும் நரிகள் ஓடித்திரியும் காட்சி யையும் காணலாம். இராமநாதபுர மாவட்டம் வளம் மருதம் :- குறைந்த மாவட்டம். தமிழ் நாட்டின் இராயல சீமை யாக இது இருந்து வருகிறது. மழை மிகக் குறைவாக உள்ள இடங்களிலேயே செய்யப் படக்கூடிய தீப்பெட்டி, பட்டாசு, வெடி மருந்துத் தொழிற்சாலைகள் இம்மாவட் டத்தில் உள்ளன. காய்ந்து விளையக்கூடிய மல்லியும் மிளகாயும் இம்மாவட்டத்தின் முக்கிய விளைபொருள் களாக உள்ளன. இதனால்,

  • பேய்ந்து விளைகிறது மலையாளம் சீமை

து பாய்ந்து விளைகிறது தஞ்சாவூர் சீமை காய்ந்து விளைகிறது இராமநாதபுரம் சீமை” என்று நாட்டுப் பாடல் கூறுகிறது. எனினும், வற்றா யிருப்பு ஒன்றியத்திலும் திருப்பத்தூர் ஒன்றியத்திலும் இராமநாதபுரம் பெரிய கண்மாய், இராஜ சிங்க மங்கலம் கண்மாய்ப் பாசனப் பகுதிகளிலும் நெல் விளைகிறது. வைகை நீர் பாய்வதாலும் மின்சார வசதியுடன் கூடிய கிணற்று நீராலும் மாவட்டமெங்கும் ஆங்காங்கே சில இடங்களில் நெல் வேளாண்மை பெருகி வருகிறது. நெய்தல்:- தமிழ் நாட்டின் கடலோர மாவட்டங் களில் இராமநாதபுர மாவட்டம் பல வகைகளில் சிறப் புடையது. நீண்ட கடற்கரையும் கோவிலாலும் இலங் கைத் தொடர்பாலும் புகழ்பெற்ற இராமேசுவரம் தீவும் இம்மாவட்டத்திற்கு உரியன. மண்டபம், பாம்பன் முதலிய சிறு பட்டினங்கள் நெய்தல் நிலத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றன.