13 நல்ல தண்ணீர்த் தீவு, உப்புத்தீவு, தலையாரித் தீவு, வெள்ளித்தீவு, முள்ளித்தீவு, முயல்தீவு, மண்ணளித்தீவு, குருசடைத் தீவு, பூமுறிச்சான் தீவு. சிங்களத்தீவு, புல்லித் தீவு, கச்சத்தீவு ஆகிய பலசின்னஞ்சிறு தீவுகள் உள்ளன. இவையாவும் மண்டபத்திலிருந்து 100 கி.மீ. சுற்றளவுக்கு உட்பட்டவை. இத்தீவுகளில் சில இயற்கை வளத்தால் சிறப்புடையன; வேறு சில தாவர ஆராய்ச்சியால் புகழ் பெற்றவை; இன்னுஞ் சில, பவளக் கல் தொழிலால் ஏற்றம் பெற்றவை: வேறு சில கள்ளக் கடத்தலால் செழிப்பவை. இலங்கை அரசு உரிமை கொண்டாடுவ தால் விளம்பரம் பெற்றிருப்பது கச்சத்தீவு. இத்தீவுகளைப் பற்றியே தனி நூல் எழுதலாம். அம் முயற்சியில் தக்கார் யாரேனும் ஈடுபடுவாராக. இராமநாதபுர நகர் மூன்று திக்குகளில் கடல் சூழ அமைந்து பருவ மழைக் காலத்தில் அதனுடைய நலம் தீங்குகளைப் பெறுகிறது. இவ்வட்டத்தில் என்னும் நீர் நிலைகளைக் காணலாம். தருவை இந்நீர் நிலையின் இயல்பு வாலாந்தருவை என்னும் ஊர்ப் பெயரிலும் நிலைத்து நிற்கிறது. தருவை என்பது தண்ணீர் தேங்கும் இடத்தைக் குறிக்கும் சொல். இம்மாவட்டத்தில் உள்ள இராமேசுவரம், இலங் கைக்குக் கப்பல் செல்லுவதால் ஒரு துறைமுகமாக இருந்து வருகிறது. பாம்பன், மண்டபம், தொண்டி ஆகிய சிறு துறைமுகங்களும் இம்மாவட்டத்தில் உள்ளன. நெய்தல் நில மக்களுக்குரிய உப்புக் காய்ச்சுதல் முத்துக் குளித்தல், சங்கு எடுத்தல், மீன் பிடித்தல் ஆகிங் தொழில்கள் இராமநாதபுரம் வட்டத்தில் சிறந்து விளய
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/15
Appearance