18 இராமநாதபுரம் வட்டம் தவிர ஏனைய 8 வட்டங் களிலும் உள் வட்டங்கள் உள்ளன. இவை தனி வட்டங் களைப் போல் இயங்கி வருகின்றன. இவையாவன: கமுதி உள் வட்டம் (முதுகுளத்தூர்) மானாமதுரை உள் வட்டம் (சிவகங்கை) இளையாங்குடி உள் வட்டம் (பரமக்குடி) தேவகோட்டை உள் வட்டம் (திருவாடானை) காரைக்குடி உள் வட்டம் (திருப்பத்தூர்) விருதுநகர் உள் வட்டம் (சாத்தூர்) இராசபாளையம் உள் வட்டம் (ஸ்ரீவில்லிபுத்தூர்) திருச்சுழி உள் வட்டம் (அருப்புக் கோட்டை) ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்ற இம்மாவட் டம் வட இராமந தபுரம், தென் இராமநாதபுரம் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இவை ஒவ்வொன்றிலும் பல ஊராட்சி மன்ற ஒன்றியங்கள் உள்ளன. இவை பற்றிய விவரங்களை நூலின் பிற்பகுதி யிலும் ஒன்றியப்பட்டியலைப் பிற்சேர்க்கையிலும் தரு வோம். சிப் பிரிவுகளின் வாலாறு இராமநாதபுர மாவட்டம் 1910ஆம் ஆண்டு ஜூன் திங்கள் முதல் நாளில் ஏற்பட்டது. மதுரை மாவட்டம் பெரிய நிலப்பரப்பு உடையதாக இருந்தது. நிர்வாக வசதிக்காக இராமநாதபுரம், சிவகங்கை ஜமீன் பகுதி கள் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு இராம நாதபுர மாவட்டத்தை உருவாக்க முடிவு முடிவு செய்யப் பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தின் பரப்பையும் குறைப்பது நன்று, என்ற கருத்து நிலவியது. அதனால் ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் வட்டங்கள் திருநெல்வேலி
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/20
Appearance