உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 எல்லைகள்: வடக்கேயும் வடமேற்கேயும் மதுரை மாவட்டம், வடக்கேயும் வடகிழக்கேயும் திருச்சி மாவட்டம், வட கிழக்கில் தஞ்சாவூர் மாவட்டம் கிழக்கேயும் தென்கிழக் கேயும் கடல், தெற்கே நெல்லை மாவட்டம், மேற்கே மேற்கு தொடர்ச்சிமலை ஆகியவை இராமநாதபுர மாவட்டத்தின் எல்லைகளாக உள்ளன. இம்மாவட்டம் குறுக்கே 9°5'க்கும் 10° 25'க்கும், நெடுக்கே 77°20'க்கும் 79-28'க்கும் இடைப்பட்டது. மாவட்டத்தின் பரப்பு 4.825 சதுர மைல் ஆகும். (ஏறத்தாழ 13.000 சதுர கி.மீ) இம்மாவட்டம் தமிழ் நாட்டின் பரப்பளவில் 12-ல் ஒரு பகுதிக்குச் சற்று கூடுத யாகும். சேலம், கோவை, திருச்சி, மதுரை மாவட்டங் களுக்கு அடுத்தபடி இது தமிழ் நாட்டின் மாவட்டமாக இருந்து வருகிறது. ஆட்சிப் பிரிவுகள். நில , வருவாய்த்துறையின் நாட்டின் பெரிய ஆட்சி வசதிக்காக ராமநாதபுர மாவட்டம் ஒன்பது வட்டங்களாய்ப் பிரிக்கப்பட்டிருக்கிறது. வட்ட ஆட்சியை மேற்பார்வை யிட நான்கு கோட்ட அலுவலகங்கள் உள்ளன. இவை இருக்கும் நகரங்களும் இந்தக் கோட்டங்களுக்குட்பட்ட வட்டங்களும் வருமாறு: இராமநாதபுரம் - இராமநாதபுரம், முதுகுளத்தூர் சிவகங்கை - சிவகங்கை, பரமக்குடி, ே தேவகோட்டை-திருவாடானை, திருப்பத்தூர். சிவகாசி - சாத்தூர், - கோட்டை ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்