உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ஏற்பட்ட வரலாறும் அதன் விளைவுகளும் இந்நூலின் பிறிதொரு பகுதியில் கூறப்பெறும். நாடும் மொழியும் . நாட்டுணர்ச்சி இம்மாவட்டத்தில் பல்கிப் பெருகி யிருப்பது கண்கூடு மருது பாண்டியனைப் பெற்றெடுத் தது சிவகங்கைச் சீமை. 'மானம் பொழியுது பூமி விளையுது' என்று வீரபாண்டியக் கட்டபொம்மன் முழங் கியது இராமநாதபுரத்து மண்ணில், காந்தீய இயக்கங் களிலும் நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் திரட்டிய இந்திய தேசியப்படையிலும் இம்மாவட்டத்தின் பங்கு மிக முக்கியமானது. பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர், காமராஜ், விருதுநகர் முத்துசாமி ஆகியோரை வழங்கியது இம்மாவட்டம். மொழி வளர்ச்சியில் இராநாதபுர மாவட்டம் கணியன் பூங்குன்றனார் பெரும் பணி புரிந்திருக்கிறது. காலம் தொட்டு, பண்டிதமணி கதிரேசனார் காலம் வரை பெரும் புலவர்கள் தோன்றியிருக்கின்றனர். இன்றும் தோன்றி வருகின்றனர். பாரிவள்ளல் தமிழ் வளர்த்த சேதுபதிகள், பாண்டித்துரைத் தேவர், அண்ணாமலை அரசர், அழகப்ப வள்ளல், முறையூர் வள்ளல் சண்முக னார், கருமுத்து தியாகராசர், கவிஞர் கண்ணதாசன் வெளி நாடுகளிலும் தமிழ் பரப்பும் எண்ணற்ற தொண்டர்கள் ஆகியோரால் இம்மாவட்டம் தமிழ் கூறும் நல்லுலகின் பாராட்டிற்கு உரியதாய் இருக்கிறது. தமிழ்க் கல்வெட்டுக்களில் மிகப் பழமையான கல் வெட்டுக்களில் ஒன்றாகிய பிள்ளையார் பட்டிக் கல்வெட்டு இம்மாவட்டத்தில் இருக்கிறது. கம்பன் சமாதியு டையது இம்மாவட்டமே