உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்புச் சிறப்பு 15 இராமநாதபுர மாவட்டம் மேற்கேயும் வடகிழக் கேயும் மலைகளையும், கிழக்கிலும் தென்கிழக்கிலும் வங்காளக் குடாக் கடலையும் இயற்கையான எல்லைகளாக உடையது. லாத இந்த மாவட்டம் ஒன்றுக்கொன்று தொடர்பில் பல பகுதிகளைக் கொண்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை ஓரத்திலும், விருது நகர்ப் பகுதி மதுரை மாவட்டத்தின் எல்லையிலும் இருக் கின்றன. சாத்தூர் வட்டத்தின் ஏனைய பகுதிகள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு அண்மையில் உள்ளன. திருவாடானை, காரைக்குடிப் பகுதிகளின் சில ஊர்கள் தஞ்சை மாவட்டத் தொடர்பு மிகுதியாக கொண்டவை. திருப்பத்தூர் வட்டத்தில் பல ஊர்களுக்குத் திருச்சி மாவட்டத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். சிலை மாள், திருப்பூவணம் போன்ற ஊர்களில் உள்ள மக்க ளின் வாழ்க்கை மதுரை மாநகருடன் ஒன்றியது. இத்த கைய பல ஊர்கள் அடங்கிய சுதம்பமே இராமநாதபுர மாவட்டம். வடகோடியில் உள்ளவர்கள் மாவட்டத்தின் தென் பகுதிகளுக்குச் செல்ல மதுரை மாநகரின் வழியாகச் செல்லுவதே எளிதாக இருக்கிறது. வட எல்லையிலும் தென் எல்லையிலும் வாழும் மக்கள் பழக்க வழக்கம், பேச்சு, தொழில் ஆகியவற்றில் முற்றிலும் வேறு பட்டுக் காணப்படுகின்றனர். இம்மாவட்டத்திற்கு உரிய தலைமை அலுவலகங்கள் மதுரை மாநகரில் உள்ளன. மாவட்டத்திற்கு வெளியே அதன் தலைநகரம் இருக்கும் சிறப்பு (சிறப்பின்மை) இராமநாதபுரம் மாவட்டத்திற்கே உண்டு. இவ்வாறு