உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 வைப்பாற்றில் கலக்கிறது. சாத்தூர், இவ்வாற்றின் கரை யிலிருக்கிறது, சருகணியாறு : சிவகங்கை வட்டத்திலுள்ள குன்று ஒன்றில் தோன்றி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. உப்பாறு ; மதுரை மாவட்டத்தில் திருமணி முத்தாறு என்னும் பெயருடன் தோன்றும் இவ்வாறு ஏரியூர், கல்லல் ஆகிய ஊர்களின் ஊர்களின் வழியாக வழியாக தேவ கோட்டை அருகே கடலுடன் கலக்கிறது. பாலாறு : நத்தம் பகுதியிலிருந்து சிங்கம்புணரி, முறையூர் வழியாக திருப்பத்தூர்க் கண்மாயை நிரப்பி இந்த ஆறு உப்பாற்றுடன் ஒன்றிவிடுகிறது. மணிமுத்தாறு: வாராப்பூர் ஜமீன் பகுதியில் தோன்றி திருமெய்யம் வட்டத்து ஊர்கள் வழியாய் இராமநாதபுர மாவட்டத்து நெற்குப்பைக்குள் நுழைந்து மகிபாலன்பட்டித்தீவை உண்டாக்கும் இச் சிற்றாறு, கல்லல் ஆறு எனப்படும் உப்பாற்றுடன் கலந்து விடுகிறது. சீவலப்பேரி, விஜய நதி,மன்னார் கோட்டை நதி, கிருதமால் ஆறு, கானல் ஓடை, தேனாறு என்னும் சிற்றாறுகள் இம்மாவட்டத்தில் உள்ளன. மரம், செடி, கொடிகள் செய்ய மன்னார் வளைகுடாவிலும்,பாக்ஜல சந்தியிலும் இம் மாவட்டத்தைச் சேர்ந்த தீவுகளிலும் மிகப் பெரிய அளவில் பல வகையான பவளப் பாறைகள் உள்ளன. இவை ஜெல்லி முதலிய உணவுப்பொருள்கள் உதவுகின்றன. சிமெண்ட், உரம், கால்சியம் கார்பேடு முதலியன செய்வதற்கும் இவை உதவுகின்றன. இவற் றைப்பற்றி பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.