உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடர்பு மிகுதி. . 50 தீவு முதலிய பல நாடுகளுக்கு இம்மாவட்டத்தார் சென்றுள்ளனர். ஒரு சிலர் அங்கே நிலைத்தும் உள்ளனர். குறிப்பாக, இலங்கைக்கும் இம்மாவட்டத்திற்கும் இலங்கைக்குச் செல்லுவதை இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் சேர்ந்து தடுத்த போதிலும் கள்ளத்தனமாகச் செல்ல மக்கள் முயன் றனர். 1952-1960இல் இந்நிலை இருந்தது. படகுகளில் கள்ளத்தனமாக மக்களை ஏற்றிச் சென்று இலங்கைக் கரையருகே அவர்களை இறக்கி விட்டுச் சில பட கோட்டிகள் பெரும் பணம் சம்பாதித்தனர். நீரில் குதித்து நீந்தத் தெரிந்தவர் மட்டுமே கரையேறினர். இவ்வாறு படகில் செல்லுவதற்கு ஏற்பாடு செய்யும் தரகர்களும் உருவாயினர். தரகர்களை எதிர்பார்த்த மக்கள் கரையோரமாகக் காடாரம் பங்களில் புதர்களின் மறைவில் ஒளிந்து மழையாலும் தக்க உணவின்றியும் தவித்தனர். சிலர் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர் 1941 டிசம்பர் ஏழாம் நாள் இரங்கூன் மாநகர் மீது ஜப்பானியர் குண்டு மாரி பொழிந்தனர். அதைத் தொடர்ந்து பர்மாவில் ஜப்பானியர் ஆட்சி ஏற்பட்டது. பர்மாவிலிருந்து 1942 ஏப்ரல் - மே மாதங்களில் இம்மா வட்டத்தார் பல்லாயிரம் பேர் கால்நடையாக அரிக்கன் - சட்டி காமம் வழியாவும் இம்பால்- மணிப்பூர் வழியா யும் மலைச்சரிவுகளிலும் அடர்ந்த காடுகளினூடேயும் வந்தனர். விலங்குகளுக்கும் நோய்களுக்கும் இரையான வர் தவிர எஞ்சியவரே தாய்நாட்டை அடைந்தனர். ஜப்பானிய ஆட்சியில் தொடர்ந்து தங்கியவர்களும் பல வாறான தொல்லைகளுக்கு ஆளாயினர். ✓ 1961க்குப் பிறகு இலங்கையிலிருந்தும் பர்மாவி லிருந்தும் சில நூறாயிரம் மக்கள் இம்மாவட்டத்திற்குத் திரும்பியுள்ளனர்.