உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 15-ஆம் நூற்றாண்டிலேயே திருமங்கலம், விருதுநகர் சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, பாளையப்பட்டி ஆகிய இடங்களில் இவர்கள் பேட்டைகள் அமைத்திருக் கின்றனர். இவர்களுடைய பொது நிதி, இவர்களுக்குள் விற்பனைவரி போன்று வசூலித்துக்கொள்ளப் படுகிறது. இதற்கு மகமைப் பணம் என்று பெயர். மகமைப் பணத் தைப் பற்றி 1782-இல் எழுதப்பெற்ற ஓர் ஓலைச்சுவடியி லிருந்து இவர்கள் எந்தெந்தப் பொருள்களில் வியா பாரம் செய்து வந்திருக்கின்றனர் என்பது தெரிகிறது. — "கச்சைப் பொதி, வேர்ப்பொதி, நூல்பொதி, கெம்புப்பொதி, புகையிலை தென்பொதி, பஞ்சு தென்பொதி, சவரிப்பொதி -இந்த வகைக்கு பொதி க, பணம் க. பாக்கு, மிளகு, பஞ்சு சின்னப்பொதி, பலசரக்கு, மணிவெட்டி, கொழு இந்த வகைக்கு பொதிக,பணம் - இ. பருத்திப் பொதி, எள்ளுப் பொதி, இந்த வகைக்குப் பொதி க, பணம்-வ. முத்துப் பொதி, பயறு பொதி, வெத்திலை, நாரத்தங்காய், மிளகாய், மற்றவகை. மலைப் பொருள்கள் விற்பனையிலும், தூத்துக்குடி துறைமுக வளர்ச்சியையொட்டி, ஏற்றுமதி இறக்குமதி வாணிகத்திலும் நாடார் பலர் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாகரிலும் இவர்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவினது, ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட நகரில் இவர்கள் சமூக மாநாடும், கல்வி மாநாடும் கின்றன. இவர்களுக்குள் பூர்விக, புராண காரண கூட்டு குல் கோத்திரங்கள் பல உண்டு. இவற்றுக்குரிய கோவில்கள் உள்ளன. சான்றாக சிவகாசி நாடார்களுக்குள் உள்ள