உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பிரிவுகளைக் கூறுவோம். சிவனடியான், பாவாலியன் முண்டைக் கண்ணன், அரசன், வன்னிகுட்டி, மாயன் பூசாரி, ஏனாதிநாதன், சிரசு, கட்டி, வாத்தியார், ஆதி நாடான், வெள்ளைப்பொட்டு, நெருப்பாக்கி. காவடிக் காரன், அரிசிக்கொள்ளுவான் முதலிய பல. அந்தந்தப் பெயருக்கு உரிய வேலைகளை, கோவில் தேர் இழுக்கும் போது இவர்கள் செய்து வருகின்றனர். . . இறந்தவர் உடலை எரிக்கும் வழக்கம் சிலரிடம் உளது. நாடார் நாடார் இனத்தார் பலர், இறந்தவர்களைப் புதைத்தே வந்திருக்கின்றனர் என்று தெரிகிறது. கணவன் சமாதிக்கு அருகே பல ஆண்டுகளுக்குப்பின் இறக்கும் அவர் மனைவியின் உடலைப் புதைப்பர். இச்சமாதிகளை அவர்கள் வழியினர் வழிபடுவர். இவ்வாறு வழிபடும் இடம் மாலைக்கோவில்' 'இளமையில் அதாவது பூப்பு எய்துமுன்- உயிர் நீக்கும் குழந்தைகளை கன்னித் தெய்வம், எனக் கருதி வழிபடுவர். - பெண் ஒரு நூற்றாண்டுக்கு முன்வரை நாடார்கள் பனங் கருப்பட்டி முதலிய பொருள்களை பொதிமாட்டின் உதவி கொண்டு 150 மைல் வரையும் சுமைகளோடு சென்று அந்தந்த இடங்களில் தங்கிப் பேட்டைகள் அமைத்து பண்டமாற்று வியாபாரங்கள் செய்தனர். நாளடைவில் சந்தை கூடும் இடங்களில் சந்தைப் பொருள்களை, அப் பொருள்கள் உற்பத்தியாகும் காலங்களில் மொத்த மாகக் கொள்முதல் செய்தனர். அடுத்த கட்டமாக அந்தந்த ஊர்களில் குடும்பத்துடன் குடியேறிச் சிறு கடைகளைத் தொடங்கினார்கள். பயிர்த் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு வருவாய் இல்லாத மாதங்களில் கடன் கொடுத்து, பல மாதங்