93 களுக்குப் பின்னர் அவர்களுடைய விளை பொருள்களை வாங்கிக் கொண்டனர். இன்னுஞ் சிலர், சிற்றூர்க் கடை களில் நெல் அல்லது மணிலாக் கடலையை அவ்வப்போது பெற்றுக்கொண்டு பண்ட மாற்றாக நவதானியங்களையும் மளிகைப் பொருள்களையும் கொடுத்து வந்தனர். ஒவ்வோர் ஊரிலும் சமூகத்துக்கு என இவர்கள் தங்க ளுக்குப் பொதுவான தோப்பு ஏற்படுத்திக் கொண்டிருக் கின்றனர். காலை நேரங்களில் குளிக்கவும் தொழில் நிலைமைகளை ஒருவர்க்கொருவர் அறிவிக்கவும் இத் தோப்பு, பயன்படுகிறது. வணிகர்களுள் தொலை பேசியை மிகுதியாகப் பயன்படுத்தும் இயல்பு இவர் களிடம் நிலவுகிறது. மதுரை, சிவகாசி, விருதுநகர், திருநெல்வேலி 18-ஆம் நூற்றாண்டில் பெரிய அளவில் இவர்களுடைய வியபார் நகர்களாக இருந்தன. இந்நகர்களில் வியாபாரம் செய்த அனைவரும் தங்களுக்குள் திருமணம் செய்து கொண்ட தாயும் கூறப்படுகிறது. ஆங்கிலேயே ஆட்சியில் இவர் களில் பலர் ஆங்கிலேயர்களின் பெரு மதிப்பைப் பெற்று வெளி மாநிலங்களுக்கும் தங்கள் தொழிலை விரித்தனர். இன்று, வணிகத் துறையில் ஈடு இணையற்று விளங்கு கிறார்கள். காப்பிக்கொட்டை, ஏலக்காய், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், மிளகு, மிளகாய் வத்தல். விறகு, கரி, மரவாடி, பெயிண்டு வாணிகம் இவர்களுக் குக் கை வந்த கலை. சென்னை நகரில் இவர்கள் பெருந் தாகையாக உள்ளனர். தோட்டத் தொழில்களிலும் இயந்திரத் தொழில்களிலும் இவர்களில் பலர் முன்னேறி யுள்ளனர். தீப்பெட்டி, மத்தாப்பு, கவின் அச்சுக்கலை ஆகிய தொழில்களில் இவர்கள் இந்தியாவிலேயே ஒரு 'சக்தி'யாக விளங்குகிறார்கள்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/95
Appearance