உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 இவர்களுடைய முன்னேற்றத்துக்குக் காரணம்- கடும் உழைப்பு, ஒற்றுமை, கல்விப் பெருக்கம், அரசியல் செல்வாக்கு. ஹிந்து நாடார். கிறித்தவ நாடார் என்ற வேறுபாட்டை இவர்கள் மிகவும் வற்புறுத்துவதில்லை. கிறித்தவத்தில் சேர்ந்த நாடார்கள் தொழிலிலும் அனுபவமும் பெற்றனர். அவர்களைப் பார்த்து ஹிந்து நாடார்களும் கல்வி வளர்ச்சி பெற்றனர். நாள்தோறும் பிடி அரிசி எடுத்தும், தொழில்களில் மாமை வசூலித்தும் கல்வி நிலையங்களை உருவாக்கி யுள்ளர். அரசினர் உயர்நிலைப்பள்ளி, உயர் தொடக்கப் பள்ளி இருக்கும் ஊர்களிலும் இவர்கள் தங்களுக் காகத் தனியே இத்தகைய கல்விக் கூடங்களை அமைத் துக் கொண்டிருக்கின்றனர். ஆண்டுதோறும் கல்வி மாநாடு கூட்டி, சமூகத்துக் கல்வியாளர்களைப் போற்றி யும் ஊக்கியும் வருகின்றனர். மருத்துவர்களாகவும் வெளிநாடுகளில் உயர் துறைகளில் மேற்படிப்பும் படித்த வராகவும் நாடார் ஆடவரும் பெண்டிரும் பெருந் தொகையினர் உள்ளனர். ஹார்ட்கிரேவ் என்ற அமெரிக்கப் பேராசிரியர் Nadars of Tamil Nad என்ற ஆராய்ச்சி நூல் எழுதி யிருக்கிறார். ஆங்கில ஆட்சியும் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியும் நாடார் வணிகர்கட்கு ஆதரவு தந்தன. காங்கிரஸ் ஆட்சியில் ஒன்பதரை ஆண்டுகள் காமராஜ் முதலமைச்சராக இருந்தார். அக்காலத்தில் கன்னியாகுமரிப் பகுதி திருவிதாங்கூர்-- கொச்சியிலிருந்து பிரிக்கப்பட்டுத் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பெற்று 'கன்னியாகுமரி மாவட் டம் உருவாயிற்று. விருதுநகரைத் தலைநகராகக்