95 கொண்ட ஒரு மாவட்டமும் ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் பரவிற்று. திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுதியான பற்றும் நீண்ட நாட் தொடர்பும் கொண்ட பலர் நாடார் இனத்தில் இருக்கின்றனர். 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாடார் இனத் தவர் பலர் பொதுச் செயல்களிலும், அறச் செயல்களி லும், அரசாங்க வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றர். இப் பெரு மாறுதலுக்கு வழிகாட்டிகளாக வே. வ இராமசாமி, கே.காமராஜ், சி.பா.ஆதித்தன் ஆகிய பெருமக்களைக் கூறலாம். நகரத்தார் காவிரிப்பூம்பட்டினம் என்ற பூம்புகார் நகரிலிருந்து இங்கே குடியேறியவர்கள் நகரத்தார். இவர்களைப் பற்றி, 'இராமநாதபுரம் மாவட்டம் - ஐந்தாண்டின் சாதனைகள் 1951-56' என்ற தமிழ் நாடு அரசாங்க வெளியீடு பின்வருமாறு கூறுகிறது: திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற ஒளவை மூதாட்டியின் அணிமொழிக்கிணங்க, சாவகம், சீனம், ஈழம், இந்தோசீனம், பர்மா சிங்கப்பூர் போன்ற கடல்கடந்த நாடுகளுக்கெல் லாம் சென்று வாணிபம் செய்யும் பெருங்குடி வாணிக மக்களாகிய நாட்டுக்கோட்டைச் செட்டி யார்கள் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தான். பண்டைக் காலத்தில் கிரேக்க ரோம நாடுகளுடன் வாணிபம் செய்து தண்டமிழ் நாட்டின் சீர்த்தியை எண்டிசையும் பரப்பிய பெருங்குடி வணிகர்களின் வழித்தோன்றல்கள் நாட்டுக்கோட்டைச் செட்டி யார்கள் என்று கூறுவர். இவர்களது சலியாத, உழைப்பாலும் திறம்பட்ட செயலாலும் இலங்கை
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/97
Appearance