96 இந்தோசீனா,பர்மா போன்ற அயல்நாடுகளில் காடு மேடாய்க் கிடந்த இடம் எல்லாம் இன்று ரப்பர்த் தோட்டங்களாயும், தேயிலைத் தோட்டங்களாயும், நெல் வயல்களாயும் வளம் கொழிக்கின்றன. இவர்கள் இம்மாவட்டத்தின் பல சிற்றூர்களில் திருப்பத்தூர், சிவகங்கை திருவாடானை வட்டங்களில் வாழ்கின்றனர். இவர்கள் தொகை இம்மாவட்டத்தில் 75,000ம் புதுக்கோட்டை - திருமெய்யம் வட்டத்தில் 20,000-ம் ஆகும். இவர்களுக்கு உரிய இளையாற்றக்குடி முதலிய ஒன்பது நகரக் கோவில்களும் இம்மாவட்டத் திலேயே அமைந்துள்ளன. நகரத்தார் அனைவரும் சமயத்தால் சைவர் ஆவடி. சிவப்பற்றால் இவர்கள் மேற்கொண்ட திருப்பணிகளா லேயே தமிழர் கலைக்கு நிலைக்களமாக விளங்கும் கோவில் கள் நின்று நிலவுகின்றன. பாடல் பெற்ற தலங்களில் இவர்கள் நிறுவியுள்ள அறக்கூழ்ச்சாலைகள், விடுதிகள். பசுமடங்கள், தேவாரப் பள்ளிகள் எண்ணிறந்தன, இவர்களின் தொழில் திறமையும், முயற்சிகளும் காந்தி யடிகளாலும் ஜவஹர்லால் நேருவாலும் அவரவர் நூல்களில் புகழ்ந்து எழுதப்பெற்றுள. தமிழ் நூல்களைப் பதிப்பித்தும் தமிழ்ப் புலவர்களை ஆதரித்தும் இவர்கள் செய்து வரும் பணிகளைப் பாராட்டிக் கவியரசர் சுப்பிரமணிய பாரதியார் பாடி யுள்ளார்.தமிழ் இசையின் மறுமலர்ச்சியில் இவர்கள் பங்கு போற்றுதற்குரியது. இந்திய நாட்டு விடுதலை பெற நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் நிறுவிய ஆஜாத் ஹிந்த்லீக், இந்திய தேசிய இராணுவம் ஆகியவற்றில் இவ்வினத் தார் கலந்து கொண்டு பெருமளவில் ஈடுபட்டனர்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/98
Appearance