உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$7 பட்டினத்தடிகள் சொக்கலிங்க ஐயா போன்ற சமய ஞானிகளும், பாடுவாய் முத்தப்பர், பண்டிதமணி கதிரேசனார் போன்ற புலவர்களும், பல்கலைக் கழகங் கண்ட அண்ணாமலையரசர் தம்செல்வமேயன்றிக் கடனும் பட்டுக் கல்வி நிலையங்கள் கண்ட அழகப்பர் போன்ற தொழில் அரசர்களும் இம்மரபினரே. இரண்டாம் உலகப்போரால் தென்கிழக்காசியாவில் ஏற்பட்ட அரசியல் மாறுதலால், இவர்களில் பெரும் பாலோர் பொருள் வளம் குன்றியுள்ளனர். பொன்னி னும் மணியினும் முத்தினும் இயன்ற நகைகளையும், ஏனையு பயன்படு பொருள்களையும் விற்று, உண்டு வாழும் நிலைக்குப் பலர் தாழ்ந்துள்ளனர். நாடெங்கும் புது நகரங்களும் குடியிருப்புப் பகுதிகளும் தோன்றும் இந்நாளில் இவர்களில் சிலர் பூவையர்களை மணம் முடிக் கவும். கடன் தொல்லை நீக்கவும், தம் மாடமாளிகை களை இடித்துச் சன்னலாகவும் மரமாகவும் விற்கும் இழி நிலையிலும் காணப்படுகின்றனர். இவர்கள் ஆதரவால் வாழ்ந்து வந்த கொல்லர், தச்சர், கொத்தர், ஸ்தபதி ஆகிய பல சிறந்த தொழி லாளர்கள் இப்போது இந்திய நாடெங்கும் பல்வேறு இடங்களில் பணி புரிகின்றனர். ! தொல்காப்பியம். சிலப்பதிகாரம் முதலிய பண்டைத் தமிழ் இலக்கியங்களில் குறிக்கப்படும் பழக்க வழக்கங்களும் மண முறைகளும் நகரத்தாரிடையே இன்னும் நின்று நிலவு வருகின்றன. இவ்வினத்தவர் சில ஆயிரம் பேர் வெளிநாடுகளில் குறிப்பாக சிங்கப்பூரிலும் மலேசியாவிலும்- குடி உரிமை பெற்று வாழ்ந்தனர்.