முஸ்லிம்களில் றனர். 108 பல்லாயிரம் பேர் ஈடுபட்டிருக்கின் மீன் பிடி தொழிலில் முதலாளிகளும் தொழி லாளிகளும் உள்ளனர். மீன் பிடிக்கப் படகுகளும் கரை வலையும் வைத்து, கூலிக்கு ஆட் சேர்த்து, செல்வர்கள் பெரிய அளவில் தொழில் நடத்துகின்றனர். கரைவலை 2 கி.மீ நீளமும் 200 மீட்டர் அகலமும் 5 மீட்டர் உயரமும் உடையது. கரையிலிருந்து கிளம்பிய படகுக்காரர்கள் கடலில் வெவ்வேறு திக்குகளில் நின்று கொண்டு அவற்றின் ஊடே ஊடே கரைவலையை விரித்து பலவாறு குரல் கொடுத்து மீன்களை விரட்டி ஆறு மணி நேரத்தில் பலலட்சம் மீன்கள் பிடித்துவிடுவார்கள். மீன் களைப் பிடிக்க, கரைவலை ஒரு பொறி போன்று இருக் கும். அதில் தேங்காய்த் துண்டுகளும் பொருத்தப் பட்டிருக்கும். கரையிலிருந்து கரைவலையை இழுத்து மீன்களைக் கரை சேர்ப்பர். கணவாய் (Sepio) போன்ற சில மீன் வகைகளில் அவற்றின் கடல் நுரை வந்ததும் பிறகு சில பொருள்களை எடுத்து இந்தியன் இங்க் என்னும் ஒருவகை அழுத்தமான மை செய்தும் சிலர் வாழ்கின்றனர்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/110
Appearance