151 கொடுத்து வாங்க வேண்டியதிருக்கிறது. சென்னைக்கு வடக்கே அகல இரயில் பாதையும் தெற்கே குறுகிய இரயில் பாதையும் இருப்பதால் நேர் பெட்டியில் மூலப் பொருள்களை வருவிக்க முடியவில்லை. போக்குவரத்துச் செலவு கூடுதலாவதுடன் பொருள்கள் வந்து சேருவதும் சுணங்குகிறது. இராஜபாளையத்தில் கெளரி மெட்டல் ஒர்க்ஸ் என்ற நிறுவனம் மர ஆணி முதலிய பொருள்கள்.(Wood Screws and Wire Nails) செய்கிறது. தென்னிந்தியாவில் இத்தகைய தொழிற்சாலை இன்னும் ஒன்றுதான் உளது. கௌரி மெட்டல்ஸ் பொருள்கள் பெங்களூர் இந்துஸ் தான் ஏாகிராப்ட், விசாகப்பட்டினத்திலுள்ள கப்பல் கட்டும் தொழிற்சாலை, இந்திய இரயில்வேக்கள் ஆகிய வற்றிற்கு விற்பனை செய்யப்படுகின்றன. தொழிற்பேட்டைகள் : இம்மாவட்டத்தில் முதல் தொழிற்பேட்டை, விருது நகர் அருகே சூலக்கரையில் தொடங்கப் பெற்றது. தகர டப்பாக்கள் செய்தல், தகர டப்பாக்களில் அச்சிடுதல் இயந்திரத்திற்கான திருகாணிகள் செய்தல், உலோகத் தகடுகள் செய்தல், ஜெம் கிளிப்கள், குண்டூசிகள் செய் தல், பாலித்தீன் பைகள் செய்தல், எவர்சில்வர் பாத் திரங்கள் செய்தல், எஃகுக் குழாயிலான பர்னிச்சர் செய்தல், டூல்ரூம் சர்வீஸிங் முதலியன இங்கு நடை பெறுகின்றன. காரைக்குடிக் கருத்தரங்கின் பயனாகச் சிவகங்கை யிலும் காரைக்குடியிலும் தொழிற்பேட்டைகளை அரசு ஏற்படுத்திற்று. சிவகாசியில் ஸ்ரீ வில்லிபுத்தூர் சாலையில் கூட்டுறவு முறையில் தொழிற்பேட்டை ஏற்பட்டிருக் கிறது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/153
Appearance