உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 காரைக்குடியிலும் சிவகங்கையிலும் தொழிற் பேட்டைகளை, வணிகர்கள் தக்கவாறு பயன்படுத்திக் கொள்ளவில்லை. பல இடங்கள் காலியாக உள்ளன. உற்பத்தியான பொருள்களை உள்ளூரில் விற்க இயல வில்லை.இயந்திரக் கருவிகள், அருகேயே கிடைப்பதில்லை; இதனால் இயந்திரங்களைப் பழுது பார்ப்பது தொல்லை யாக இருக்கிறது. மூலப் பொருள்கள் வரவழைப்பதில் கூடுதலாகச் செலவு ஏற்படுகிறது. இந்நிலையில் அரசின ரின் தொழிற்சாலைகளை, இந்தப் பேட்டைகளில் வைப்பதே சாலச் சிறந்தது. . இராஜபாளையத்தில் தமிழக அரசு, ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக ஜெனரல் பர்ப்போஸ் எஞ்ஜி னீயரிங் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறது. இதில் சைக்கிள் சாமான்கள், வாழைத்தண்டு விளக்கு மூடிகள் (Tube Light Fitting Shadsr), எஃகு மேசை, நாற்காலிகள், வேளாண்மைக் கருவிகள், மருத்துவ மனைகளுக்குத் தேவையான தளவாடங்கள், (Electric Line Construc- tion Materials) முதலியன மிக நன்றாகச் செய்யப படுகின்றன. திரைப்படத் தொழில் திரைப்படத் தொழிலில் தமிழ்நாடு அடைந்திருக் கும் முன்னேற்றம் பேரளவு இமமாவட்டத்தினரால் எனலாம். புகழபெற்ற ஏ. வி. எம். காரைக்குடி ஊரினர். ஏ.வி.எம். ஸ்டூடியோ, தேவகோட்டை ரோடு இரயில் நிலையத்துக்கு அருகே பல ஆண்டுகள் நடைபெற்றுப் பின்னர் சென்னைக்கு மாற்றப்பெற்றது. இந்தியத் திரைப்படத் தொழில் கழகத் தலைவர் ஏ.எல.சீனிவாசன் இம்மாட்டத்துச் சிறுகூடற்பட்டி யினர்.