உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 பிற தொழிற்சாலைகள் : இராஜபாளையத்தில் . மெட்ராஸ் சிப்போரிடு பாக்டரி, செக்கோசுலவகிய உதவியுடன், மரத்தூள்களி லிருந்து பலகைகள், தள்ளு கதவுகள், உத்தரப் பலகை கள் (False ceilings), மேசையின் மேற்பகுதிகள் (Table Tops) செய்கிறது. கம்பெனியில் (Black பாரத் இன்சுலேசன் டேப் Adhesive, Low Tension Electric Insulation Tapes) முதலியன செய்கின்றனர். சாத்தூரில் முப்பதுக்கு மேற்பட்ட "நிப்' தொழிற் சாலைகள் உள்ளன. 1948-ஆம் ஆண்டு அளவில் குடிசைத் தொழிலாக இது ஏற்பட்டது. பவுண்டன் பேனா நிப் உற்பத்தியில் சாத்தூர் சிறப்பிடம் பெற்றுவிட்டது. பர்மா, மலேசிய நாடுகளிலிருந்து திரும்பி வந்தவர் கள் இளையாங்குடியில் 1943-இல் தோல்பை முதலியன செய்யலாயினர். முப்பதுக்கு மேற்பட்ட தோல் பொருள் தொழிற்சாலைகளும், கான்வஸ் - ரப்பர் செய்யும் பதினைந்து தொலைற்சாலைகளும் பொருள்கள் கொண்ட நகராக இளையாங்குடி வளர்ந்திருக்கிறது. பிளாஸ்டிக் குடைகளையும் இங்கு செய்கிறார்கள். தீப்ெபட்டித் தொழில்: தீப்பெட்டி, அன்றாட வாழ்க்கைக்கு அனைவர்க்கும் தேவையான ஒரு பொருள். இதன் உற்பத்தியில் இந்தி யாவில் முதலிடம் வகிப்பது இராமநாதபுர மாவட்டம், சிவகாசி இத்தொழிலின் தலைநகரம். சாத்தூரிலும் வேறு பல ஊர்களிலும் இத்தொழில் பரவியிருக்கிறது. 800க்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. பெரிய தொழிற் சாலைகளின் தொகை 75, சிவகாசியில் இத்தொழில் 2-10