182 நாட்டில் திரைப்படத் தொழில் வரலாறு நகரத்தார் களுடன் பின்னிப் பிணைந்தது. எனவே இதில் வியப்பு ஒன்றுமில்லை. திரைப்படங்களில் தேசியப்பாடல்களைப் புகுத்தியவர் ஏ.வி.எம். காந்தியடிகள் வாழ்க்கையை வரலாற்றுப்படமாக எடுப்பதற்காக உலகெங்கும் சுற்றுப்பயணம் செய்தவர் திரு.ஏ.கே.செட்டியார். இவா 1936-ஆம் ஆண்டில் சுபாஷ் சந்திர போஸ் ஆஸ்திரியாவில் தங்கியிருந்த போது ஒருசெயதிப்படமும் எடுத்தார். திரைப்படங்களிலும் மேடைகளிலும் காந்திகதை நடத்தி தேசிய உணர்ச்சியைப் பரப்பி வருபவர் இம் மாவட்டத்துக் கொத்தமங்கலம் சுப்பு. இவர் பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். இதழ்கள் : குமரன், ஊழியன் போன்ற வார இதழ்களையும் எண்ணற்ற பல தேசிய இதழ்களையும் இம்மாவட்டத் தார் நடத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற பல இதழ ஆசிரியர்கள் இம்மாவட்டத்தில் இளமையில் தங்கித் தேசிய உணர்ச்சி பெற்றவர்களே. சமஸ்தான இணைப்பு: புதுக்கோட்டைத் தனி அரசை இந்திய நாட்டுடன் இணைத்ததிலும் இம்மாவட்டத்துக்குப் பங்கு உண்டு. 1942 1947-ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தில் மிகப்பெரிய கிளர்ச்சி நடைபெற்றது, இராமநாதபுர மாவட்டத்தில்தான். தொன்றுதொட்டு தேசிய இயக்கங்களிலே முன்நின்ற இராஜபாளையம் 1942-இலும் மிகவும் ஈடுபட்டு பெரும்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/184
Appearance