உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201 காரைக்குடிப்பகுதியில் பல ஆண்டுகளாகப் பட்டி மன்றங்களும் கவியரங்கங்களும் பல்கிப் பெருகியுள்ளன. இன்று தமிழ் நாடெங்கும் பரவிக் காணப் பெறும் இத்த கைய தமிழ் உணர்ச்சிக்கு இம்மாவட்டம் வித்திட்டது என்று சொல்வது மிகையாகாது. இலக்கியம் பெற்ற ஊர்கள்: திருப்பூவணம் ஒர் உலாவையும், நாட்டரசன் கோட்டை ஒரு பள்ளுவையும், குன்றக்குடி ஒரு கலம்பகத் தையும், பல ஊர்கள் தக்க புலவர்களின் புராணங்களை யும் பெற்றுள்ளன. கல்வெட்டுக்கள்: தமிழ்க் கல்வெட்டுக்களை அரசினர் பெருஞ் செலவு செய்து, படி எடுத்த பிறகு மூன்று தொகுதிகளை மட்டும் வெளியிட்டு அந்தப் பணியை நிறுத்தினர். அப்போது சென்னை இராசதானியின் சட்ட மேலவையின் துணைத் தலைவராய் இருந்த இராமநாதபுரம் சேதுபதியின் முயற்சியால் கல்வெட்டுக்களின் படிகள் (விளக்கம் இன்றி மூலம் மட்டும்) அரசினரால் அச்சிடப் பெற்றன. மிகப் பழமையானத் தமிழ்க் கல்வெட்டு, பிள்ளையார் பட்டி கற்பக வினாயகர் கோவில் கருவறையில் உள்ளது. இதைப்பற்றி இதுவரை நடந்த உலகத்தமிழ் மாநாடு மூன்றிலும் ஆராயப் பெற்றிருக்கிறது. ஊர்ப் பெயர்கள்: இம்மாவட்டத்தில் பல ஊர்களின் பெயர்கள் பழந் தமிழர் வீரத்திற்குச் சான்றாக உள்ளன. இந்நாளில் மகாவீரச் சக்கரம் முதலிய சிறப்புக் களும் நிலக்கொடையும் போர் வீரர்களுக்கு வழங்கப் பெறுகின்றன. சங்க கால அரசர்கள் படைத்தலைவர் -13