200 திங்களுக்கு ஒரு சொற்பொழிவு என்ற முறையில் சங்க இலக்கியம் பற்றியும் சீவகசிந்தாமணி பற்றியும் இதுவரை 23 தலைப்புக்களில் பல தமிழறிஞர் சொற் பொழிவு செய்துள்ளனர். இவை நூல்வடிவில் வெளி யிடப் பெறும். பல்வேறு கடைகளில் உள்ள விற்பனைப் பொருள்களுக்கு எளிதான நல்ல தமிழ்ச் சொற்களைக் கழகம் தொகுத்தும் ஆக்கியும் வருகின்றது. தொடக்கப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்கட்கு ஆத்திசூடி; கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை, வாக்குண்டாம். நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம் முதலான முழு நூல்களைப் போட்டி நடத்திப் பரிசு வழங்குகின்றது. இவ்வகைப் போட்டிகளைக் கல்லூரிகள்வரை முழுதும் நடத்தத் திட்டமிடுகின்றது. இந்தியப் பல் தமிழ்க் கழகம்: தலைவர்: டாக்டர் வ சுப. மாணிக்கம் செயலர்: இராம பெரிய கருப்பன். நாடு இக்கழகத்தின் சார்பில் மதுரைப் பல்கலைக் கழகத்தில் இணைக்கப் பெற்ற இராமசாமி தமிழ்க் கல்லூரி 1968 முதல் நடைபெற்று வருகின்றது. இலக்கிய வகுப்புக்கள் நடைபெற்றன. இளமணி. பெருமணித் தேர்வுகள் எழுதியவர்கட்கு அந்தப் பட்டங்கள் வழங்கப்பெற்றன. நற்பயிற்சி என்ற வகுப்பு நடைபெற்றது. அப்பயிற்சி பெற்றோர்க்குச் சான்றிதழ்கள் வழங்கப்பெற்றன. திருக்குறள் கழகம் காரைக்குடி திருக்குறள் கழகம் 1953 முதல் திருக் குறளைப் பெரிதும் பரப்பி வருகிறது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/202
Appearance