199 கம்பன் மணிமண்டபம் 200×130 அடி அளவின தாகும். சுமார் 5000பேர் அமர்ந்து கம்பன் புகழ் பருகி மகிழலாம். துவரை செய்த ஆராய்ச்சியின் பயன்கள் பல புத்தகங்களாக விரைவில் வெளிவரக்கூடும். தமிழ்த்தாய் திருக்கோயில், தமிழியல் கல்லூரி ஆகிய இரண்டின் கட்டட வேலை அடுத்த ஆண்டில் தொடங்கும். இக்கழகத்தை நிறுவி இதன் உயிர்நாடியாக இருந்து வருபவர், இதன் செயலாளர் திரு.சா. கணேசன் ஆவார். விருதைத் தமிழ்க் கழகம் இது 1946-இல் 'தமிழ்த் தென்றல்' ஆசிரியர் திரு.வே.வ. இராமசாமியால் அவரது வணிக நிலை யத்தில் ஏற்படுத்தியுள்ள தமிழ் வளர்ச்சி மகமையில் சேரும் தொகையை உருபொருளாகக் கொண்டு நிகழ்ந்து வருகிறது. காந்தி கலை மன்றம் இராஜபாளையம் காந்திகலை மன்றம் திருக்குறள் வகுப்பும் தமிழ்ப் புலவர் புகுமுக வகுப்பும் நடத்தி வருகிறது. காரைக்குடித் தமிழ்ச்சங்கம் 9-11-1969இல் தோற்றம் பெற்றது. சங்கத்தலைவர் டாக்டர் வ.சுப.மாணிக்கம். சங்கச் செயலாளர் மா.அ.ஞானசேகர பாண்டியன். உறுப் பினர்கள் அறுபதின்மர். புரவலர்கள் முப்பத்தைவர்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/201
Appearance