327. மும் பெரிய மருது, சின்ன மருது, கிழவன் சேதுபதி ஆகியோர் சிலைகளும் காணத் தக்கவை. மூன்று கோவில்களையும் சுற்றிப் பெரியதொரு மதிற் சுவரும், அகன்ற தெருக்களும் அவற்றின் தென் பகுதியில் யானை மடு என்ற மிகப்பெரிய தெப்பக்குளமும், அதன் நடுவே தோற்றப் பொலிவுடன் கூடிய நீராழி மண்டபமும் உள்ளன. இவ்வூர்க் கோவில்களின் கரணைக் கால்கள் மட்டும் ஒவ்வொன்றும் 30,000 அல்லது 40,4.00 ரூபாய் ஆகும். பாதங்கள் இவை எனின் படிவங்கள்...' என்னுமாப் போல, இவற்றிலிருந்து கோயில் திருப்பணிகளுக்கும் மண்டபங்களுக்கும் ராஜகோபுரங்களுக்கும் இத்தலத் தில் எத்துணைப் பொருள் செலவிடப்பட்டிருக்க வேண்டும் என்பதைச் சிந்தித்துக்கொள்க. இவ்வாறு பொருளை வழங்கியவர்கள் பாண்டிய மன்னர்கள், மருத பாண்டியர், அரண்மனைச் சிறுவயல் குறுநில மன்னர், நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் ஆகியோர் ஆவர். சோமேசர் கோவிலில் சகஸ்ரலிங்கம் உளது. உளது. இக் காட்சி ஒரு சில கோவில்களில் மட்டுமே காணற் குரியது. இத்தலத்தில் நிகழும் பெரிய திருவிழாக்கள் மூன்று, வைகாசி மாதத்தில் சோமேசர்க்குப் பிரம்மோற் சவம் இவ்விழாவில் ஏழாம் நாளில் பொய்ப் பிள்ளையை மெய்ப்பிள்ளையாக்கிய காட்சி சிறப்பாகச் காணத் தக்கது. வரகுண பாண்டியன் மனைவி வரம் கேட்டதற்கு இசைந்து இறைவன் அவருக்கு மகன் பிறக்கச் செய்த நிகழ்ச்சியை இது நினைவூட்டுகிறது. நாட்டரசன் கோட்டையில் கண்ணுடைய நாயகி திரு விழாவுக்கு முதல்நாள் காளையார் கோவிலில் திருவிழா
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/329
Appearance