374 யாவும் தஞ்சைப் பெரிய கோவிலைப் கோவிலைப் போன்றவை. ஆனால் இது தஞ்சைக்குப் பல நூற்றாண்டு முற்பட்டது. தீர்த்தாண்டதானம்: திருவாடானையிலிருந்து தொண்டி 8 மைல், தொண்டியிலிருந்து சேதுச்சாலையில் 8 மைல் சென்றால் தீர்த்தாண்டதானத்தை அடையலாம். கடல் இங்கு ஒரு பழமையான கோவில் இருக்கிறது. கோவிலுக்கு வடக்கே வருண தீர்த்தம் இருக்கிறது. இத்தீர்த்தத்திலும் கடலிலும் நீராடுவது மரபு. நீராடுவது இராமேசுவரம், தேவிபட்டினம், திருச் செந்தூர், தீர்த்தாண்டதானம் ஆகியவற்றில் என்றும் ஆடலாம். பிற இடங்களில் கடல் நீராடுவது அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, வியதிபதம், மாதப்பிறப்பு, கிரகணம் ஆகிய நாட்களில் தான் ஆடலாம். சர்வதீர்த் தங்களுக்கும் அதிபதியான வருணபகவான் வழிபட்ட தால், இறைவனுக்கு சர்வ தீர்த்த ஈசுவரர் என்று பெயர் ஏற்பட்டிருக்கிறது. சோழமன்னன் இங்கு நீராடி, உடல்நலம் பெற்றதாக வரலாறு உண்டு. இக்கோவில் சேதுபதிகள் ஆட்சியில் இருக்கிறது. தஞ்சை மாவட்ட எல்லை உளது. உளது. மீன்பிடிப்பதும் உப்பளமும் இங்குள்ள தொழில்கள். தீர்த்தாண்டதானத்திலிருந்து 5கி.மீ.தொலைவில் அங்கிருந்து 6 கி.மீ. சென்றால் மீமிசலை அடையலாம். தீர்த்தாண்ட தானம், திருப்புனல்வாயில், சுந்தரபாண்டியன்பட்டினம் மூன்றும் முக்கோணவடிவில் அமைந்தவை. திருப் இடையமடம்: தீர்த்தாண்டதானத்திற்கும் புனல்வாயிலுக்கும் இடைப்பட்டது. விஷ்ணுபாதம் எனப்படும் (இராமரின் பாதுகை உள்ள பழமையான) கோவில் இருக்கிறது. அகஸ்தியரும் பழம்பதி நாதரும் இராமருக்குக் காட்சிகொடுத்த இடம்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/376
Appearance