உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

485 பாண்டியர் கோட்டையையும் உடையது இவ்வூர், சின்ன மருதுவின் தலைநகராய் இருந்தது. அவனது அரண்மனை இங்கு இருந்ததால் அரண்மனையை உடைய சிறுவயல் என்னும் பொருளில் ஊர்ப் பெயர் அரண்மனைச் சிறுவயல் ஆயிற்று. இந்நகரைப் பாராட்டி; பிரிட்டிஷ் தளபதி அக்கினியூ 30-7-1800-இல் தம் நாட் குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார். முள் கோட்டைகள் அமைப் பதில் இவ்வூரினர் வல்லவர்களாம். மருது பாண்டியர், சிறுவயலைப் பட்டினமாக்கி அரண்மனை கட்டிய செய்தியை சிவகங்கைச் சரித்திரக் கும்மியும் அம்மானையும் என்ற நூலிற் காணலாம். கம்பனூர்: நாச்சியாபுரத்தை அடுத்த சிற்றூர்; கவிச்சக்ரவர்த்தி கம்பன் பெயரால் அமைந்த சிற்றூர். நாட்டரசன் கோட்டைக்குச் செல்லும் வழியில் புலவர் பெருமான் இங்கே தங்கியதாகக் கருதப்படுகிறது. இவ்வூர்க் கல்தச்சர்கள் இந்தியாவெங்கும் வெளிநாடு களுக்கும் விக்கிரகங்கள் செய்து அனுப்புகின்றனர். துளாவூர்: குன்றக்குடிக்கு அருகே உளது. இவ்வூர் நுட வைத்தியம் புகழ் பெற்றது. பட்டமங்கலம்: இவ்வூர் திருக்கோட்டியூர்க்கு அருகே அமைந்தது. கீழ்ப்பட்டமங்கலம் மேலப்பட்டமங்கலம் என்ற இரு ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இப்பகுதி அடைக்கலங்காத்த நாடு எனப்படும். இந்நாட்டு நாட்டார்களும் நகரத்தார்களும் இலங்கையை வளம் கொழிக்கும் நாடாகச் செய்துள்ளனர். "பட்ட மங்கையிற் பாங்கா யிருந்தங் கட்டமா சித்தி அருளிய அதுவும்