உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 7 ரோமாபுரி அரசு ஏற்படும் முன்னர் கிரேக்கர்கள் இங்கே குடியேறி, சிரேனே என்ற நகரைத் தோற்று வித்தனர். மக்ரிப்பில் தோண்டி எடுக்கப்பெற்றுள்ள பொருள்களையும் நாணயங்களையும் கொண்டே பண்டைய கிரேக்க, ரோமாபுரி நாடுகளின் வரலாறு நிலைநாட்டப் பெற்றிருக்கிறது. இயேசுவிற்குப்பின் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வண்டல் இனத் தவரும் அவர்களுக்குப் பின்னர் பைஜாண்டியரும் மக்ரிப்பைப் படையெடுத்தார்கள். ஏழாம் நூற்றாண்டுக்குப்பிறகு அராபியர் இப் பகுதியில் கருத்துச் செலுத்தத் தொடங்கினர். 10-ஆம் நூற்றாண்டில் இங்கே அராபியர் குடியேறினார்கள். இதையடுத்துப் படிப்படியாக அராபியர் செல்வாக்குப் பெருகிற்று. 10-ஆம் நூற்றாண்டில் எகிப்தில் ஓர் அரச வம்சம் றுவப்பட்டது. இந்த வம்சத்தின் பெயர் பாடிமைட் காலிபேட் என்பது. இவர்கள் நபிகள் நாயகத்தின் மகள் பாடிமாவின் வழித்தோன்றல்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டார்கள். இவர்கள் வட ஆப்பிரிக்கா முழுவதையும் அடக்கி ஆண்டனர். செங்கடல் முதல் அட்லாண்டிக் பெருங் கடல்வரை பரவிக்கிடந்த எல்லா நாடுகளையும் கைப் பற்றிக் கொண்டார்கள். எங்கும் எவரிடமும் முகமது நபியின் சமயக் கொள்கைகளைப் பரப்புவதில் இவர்கள் வெற்றி கண்டார்கள். இஸ்லாமிய சமயத்தைப் பரப்பியவர்களுள் ஓக்பா இபின் நாபி என்பவர் ஒருவர். இவர் பத்