உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பாலும் பிரெஞ்சு ஆட்சியிலிருந்தவை. இந்த நாடு களைக் குறிப்பிட மக்ரிப் என்ற பொதுப் பெயர் வழங்கி வருகிறது. வரலாற்றை ஊன்றிக் கவனித்தால் இந்த நாடு களுக்குப் பொதுவான சில இயல்புகள் தெரிகின்றன. அவற்றை இங்கே குறிப்பிடுவோம். இந்த நாடுகள் மத்தியதரைக் கடலுக்கும் சஹா ராப் பாலைவனத்துக்கும் இடையே அமைந்து ஒரு தீவுக் கூட்டம்போலத் தோற்றம் தருகின்றன. வட கோடியில் கடற்கரை தென்கோடியில் பாலைவனம். இடையே உப்பங்கழிகளும் மலைகளும்- இவையே இந்த நாடுகளின் இயற்கை எல்லைகள். மக்ரிப் நாட்டு மக்களாகிய பெர்பர், இயேசு பிறப்பதற்கு 15 நூற்றாண்டுகள் முன்னரே இங்கு வாழ்ந்திருக்கிறார்கள். கி. மு. 9-ஆம் நூற்றாண்டில் பொனீசியர்கள் பெர்பர்மீது படையெடுத்தனர். அதன் பிறகு பொனீசியர் கார்த்தேஜ் என்னும் பெரு நகரை உண்டாக்கினர். கார்த்தேஜ், சுதந்திரமான பல அரசாங்கங்களின் தலைநகராக நெடுங்காலம் புகழ்பெற்றது. இந்த நகரம் கடல் வாணிகத்துறையில் பல நூற்றாண்டுகள் பெருஞ் சிறப்புடன் விளங்கிற்று. ஐரோப்பிய நாடுகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இந்தப் பட்டினத்தின் வாயிலாகத்தான் தொடர்பு ஏற்பட்டது. வட ஆப்பிரிக்காவில் கார்த்தேஜ்தான் அன்றையப் பெரு நகரமாகத் திகழ்ந்தது. கி. மு. 146-ஆம் ஆண்டில் கார்த்தேஜ் அரசை ரோமாபுரி மன்னர்கள் தோற் கடித்தனர். இதன் பின்னரே ரோமாபுரி அரசு செல் வாக்குப் பெற்றது.