உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ஒவ்வொரு பகுதியிலும் சிவப்பு விளக்குப் பகுதி ஒன்று உண்டு. பரப்பில் சிறியது. ஆனால் இங்கே தான் பெண்கள் நெருக்கம் மிகுதி. சில நகரங்களில் முஸ்லீம்களுக்கென்று முஸ்லீம் பெண்களும் வெளிநாட் டவர்க்கென்று யூதர் பெண்களும் தனித் தனிப் பகுதி களில் அரசினரால் வைக்கப்பட்டிருக்கின்றனர். சில குறிப்பிட்ட நாட்கள் தூதர்கள் வந்து போவதற் கென்று ஒதுக்கப்பட்டிருக்கின்றன. . ஆடவர் பெண்டிர் சேர்க்கை வெறும் உடலுற வாகக் கரு தப்படுவதில்லை. உடலுறவுடன் சேர்த்து நடனத்தையும் இசையையும் குடித்துக் கூத்தாடுவதை யும் மொராக்கோ நாட்டரசினர் விரும்புகின்றனர். சத்துணவு சாப்பிட்டு உணர்ச்சியின் எல்லையில் மக்கள் வாழ்கிறார்கள், ஆகையால் இவர்களுடைய உணர்ச்சி வெளிப்பட இத்தகைய வாய்ப்புக்கள் இருக்க வேண்டும். இதனால் நாட்டை ஆளுவது அரசினருக்கு எளிது. இராணுவத்தின் நலங் கருதியும் இந்த வழக்கங் களுக்கு அரசினர் ஆதரவு காட்டி வருகிறார்கள். காசாபிளான்கா நகரத்தில் பதிவு செய்யப் பெற்ற தாசிகளின் எண்ணிக்கை 11 ஆயிரம். இவர்களில் எல்லா நாட்டினரும் இருக்கின்றனர். ஆப்பிரிக்காவில் இதுதான் ஐந்தாவது பெரிய நகரம். பல்வேறு இனத்தவருடைய காதல் களியாட்டங் கள் நடந்தபோ திலும் கலப்புத் திருமணம் நிகழவில்லை கலப்பு இனம் உருவாகவும் இல்லை. மேலை நாட்டு நாகரிகத்தால் உடல் தெரிகிற உடைகளை அணிந்து பெண்கள் கடற்கரைகளில் சுற்றுவதும் ஆடைகளின் அளவைக் குறைத்துக் கொள்வதும் ஆடவருக்குச்