உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 இந்த நாட்டில் இரகசிய நோய்கள் மிகுதி. கட்டுப் பாடு ஏற்பட்டால் கள்ளச் சந்தை பெருகும். முகத்திரை போட்டுப் பெண்களுக்குப் பலவகையான தடைகள் இருப்பதால் காதல் களவு வழி நிகழ்கிறது காதல் ஏக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளாமல் இறந்து போகிறவர்கள் பலர். வயிற்றுப் பசியின் கொடுமை யால் இறப்பவர்களைவிட காமப்பசியால் இறப்பவர் தொகைதான் கூடுதலாக இருக்கிறது. மொராக்கோவிலுள்ள ஒவ்வொரு உள் நாட்டுத் தலைவனும் நடனமாடும் பெண்கள். படை ஒன்றை வைத்துக் கொள்வான். அவர்களின் காற்சிலம்பு ஒரு முறை ஆற்றில் தவறிவிட்டதாம். பொன்னால் ஆன இந்த ஆபரணத்தை மீண்டும் செய்ய, உள்நாட்டுத் தலைவன் புது வரி விதித்தானாம். மக்கள் அதை மன முவந்து செலுத்தினார்களாம். . ஆடவர், பெண்டிர் உறவு பற்றிய வழக்குகள் மொராக்கோ நீதிமன்றங்களில் ஏராளமாய் நடை பெறுகின்றன. பிரான்சில் படிக்கும் மாணவர்கள் அரசியல் கருத்துக்களில் வெவ்வேறு கட்சிகளை ஆதரிப் பார்கள். ஆனால் சுவை உணவுக்கும் மனத்திற்கேற்ற விளையாட்டுகளுக்கும் மொராக்கோ தான் ஏற்ற பிரெஞ்சுக் குடியேற்ற நாடு என்பதைப் பற்றி அவர்களிடையே கருத்து வேறுபாடு சிறிதளவும் கிடை இன்ப யாது. போர்க் காலத்தில் படைகள் இந்த நாட்டிற்கு வந்தபோது காதல் விளையாட்டு உச்சநிலை எய்திற்று, பெண்களுக்கும் அப்போதுதான் துணிவு ஏற்பட்டது. துணிவு இருந்தால்தான் எண்ணம் செயல்படும், வாழ்வில் வெற்றி கிட்டும் என்றும் உணர்ந்தனர்.