உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 கவனம் செலுத்தாததால் பல்லாயிரம் சதுர மைல் இந்தியப் பரப்பு சீனருக்கு உரிய தாகிவிட்டது. அல்ஜீரி யாவில் இத்தகைய நிலையில்லை. மக்கள் அல்ஜீரிய மக்களில் வெளிநாடுகளிலிருந்து குடி யேறி வாழ்பவர்கள் யூதரும் பிரெஞ்சுக்காரரும் ஆவர், யூதர் பெரும் முதலீடுள்ள தொழில்களில் ஈடுபட்டனர். பிரெஞ்சுக்காரர் கடலோர வாணிபம், அரசியல் அலுவல் அல்லது போர்த்துறைப் பணியில் இருந்தனர். அவர்களில் பலர் எளிய நிலையிலிருந்தபோது பிரான்சி லிருந்து குடியேறியனர். இந்த நாட்டுக்கே உரியவர்கள் என்று சொந்தம் கொண்டாடுபவர்கள் முஸ்லீம்கள். அல்ஜீரிய முஸ்லீம் கள் இருவகையினர். காலத்தால் முற்பட்ட பெர்பர்கள் பிற்காலத்தில் வந்து எண்ணிக்கைப் பெருக்கமும் செல்வாக்கு மிகுதியும் இணைந்துவிட்டனர். பெற்ற அராபியர்களுடன் பிரெஞ்சு ஆட்சி ஆப்பிரிக்காவில் நடந்த போது அல்ஜீரிய முஸ்லீம்கள் பிரெஞ்சுச் சட்டப்படி சில சலுகைகளையும் கொரான் சட்டப்படி சில உரிமைகளையும் கோரினார்கள், இதைப் பிரெஞ்சு அரசு ஏற்கவில்லை. பிரெஞ்சுக் குடியுரிமை பெறுபவர் கள் பிரெஞ்சுச் சட்டத்தை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அவர்கள் ஆணையிட்டார்கள். இதை எதிர்த்து ஊலிமாக்காள் கிளர்ச்சி செய்தார்கள். கிளர்ச்சியைப் பிரெஞ்சுக்காரர் பொருட்படுத்த வில்லை. பிரெஞ்சுச் சட்டத்தை மட்டும் ஏற்றுக் கொண்ட முஸ்லீம்கள் 60,000 பேர். பிரெஞ்சு பாராளு வ.ஆ.-3