உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேனலைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேவல் சண்டை முகம் கடுப்பதற்குள் முத்தத்தால் சிவப்பாக்கி முடித்து விட்டான் கோபந்தன்னை ! எனப் க - “ஏந்திழையே! இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றை உன்னிடத்தில் சொல்லாமல் இருப்பதற்கு முடியவில்லை! என் மாமன் செங் கண்ணன் இருக்கின்றாரே; அவருக்குத் தினந் தோறும் தேகத்தில் கொழுப்பேறி நாக்கு வழி சிந்துகின்ற காட்சிதன்னை நான் நேராக அனுப வித்தேன். சேவற் சண்டையிலே பெருவீரர் புகழ் மண்டிவிட்ட காரணத்தால் - என்னமோ தானே தான் உடல் வருந்திப் போரிட்டு வென்றது போல் அரிவாள் மீசை தன்னை முறுக்கிவிட்டு, அன்றெரு நாள் இலங்கை யினை ஆண்டிருந்த இராவணன் போல் எண்ணிக்கொண்டு நடக்கின்றார்; தொலையட்டும் கவலையில்லை! நான் சேவல்தன்னை வாங்கிக் கொண்டு வருகின்ற வழியினிலே மடக்கிக் கொண்டு, என்னப்பா இளவெட்டு! சண்டைக் குப் பழக்குதற்குக் கோழி வாங்கப் வாங்கப் போகின் றாயோ?' எனக் கேட்டார். “இல்லை”யென்றேன். "என்னதான் பழக்கினாலும் என்னை ஈரேழு லோகத்திலும் ஆள் இல்லை! வளர்த்துப் பார் உன் சேவலையும்! என் கோழி மூச்சுப்பட்டால் உன் கோழி ஒரு காதம் ஓடிவிடும்” எனத் தற் பெருமை மலைமீது ஏறி நின்று சண்டைக் கோழி தரும் பெருமையாலே மண்டைக் கனம் கொண்டு 66 93 வெல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேனலைகள்.pdf/99&oldid=1687449" இலிருந்து மீள்விக்கப்பட்டது