200
மறைமலையம் 6
நயமாக - இனிதாக. செருக்கு - இறுமாப்பு. இல்லக்கிழத்தி - வீட்டிற் குரியவள், அஃதாவது தலைவி.
-
அறிவுரைகள் (வடமொழியிற்) புத்திமதிகள், அறிவு
மொழிகள்.)
(பக். 78) மலையமாமலை - பொதியமலை. சந்தனச் செடி கள் வளர்வதற்கு ஏற்ற இடம் பொதியமாமலைப் பக்கமே யாதலால், அவ் விடத்தினின்றும் பெயர்த்தெடுத்து வேறிடத்திற் கொண்டுபோய் நட்ட அச் செடிகள் பிழைத்து வளர்தல் அரிது; அதுபோற் சகுந்தலையின் இயற்கைக்கு இசைந்த இடந் துறவோர் இருக்கையேயாக, இப்போத தனைப் பிரிந்து பொய்யும் புரட்டும் மலிந்த அரசர் அரண்மனையிற் சென்று தான் உயிர்வாழ்தல் இயலாதென்று, தன்னை யறியாமலே தனக்கு இனி நேரும் நிகழ்ச்சியினைச் சகுந்தலை முன்னறிவித்து விட்டாள் என்க.
துஷியந்தன் பெருந்தன்மை யுடையனாகலின் அதற்கு ஏற்ப அவன் நடத்தும் அரசியற் பகுதிகளுஞ் சிறந்தனவா யிருக்கு மென்றும், அப் பகுதிகளில் இடர்ப்பாடு உண்டாங் கால் அதனை ஆராய்ந்து நீக்கத்தக்க அறிவாற்றல் சகுந்தலைக்கு உண்டென்றுங் காசியர் கூறுதல் கொண்டு, அஞ்ஞான்றிருந்த இந்திய மாதர்கள் அரசியற் றுரைகளையும் ஏற்று நடத்தத்தக்க அறிவாற்றல் வாய்ந்தவராய் இருந்தமை தெளியப்படும்.
கீழ்த்திசையிற் றோன்றும் இளஞாயிறு இராக்காலத்து ருளைப் போக்கி ஒளியைத்தந்து எல்லா வுயிர்கட்கும் அறிவையும் இன்பத்தையுந் தருதல்போலச், சகுந்தலையின் பாற் றோன்றும் மகனும் மாற்றரசராற் சூழ்ந்த இடரை நீக்கித் தன்கீழ் வாழ்வார்க்கெல்லாம் அறிவையும் இன்பத்தையும் தருவன் என்றார்.
-
தாழ்த்தால் தாமதித்தால் (வடசொல்), நீட்டித்தால். பொறிக்கப்பட்ட -அடையாளமாகச் செதுக்கி வைக்கப் பட்ட.
(பக்.79) இவர்தல் - ஏறுதல். போர்மறவன் - போர் வீரன். குடில் - சிறுவீடு.
-