சாகுந்தல நாடகம்
-
199
காணவே, எனது உளம் வேம் என் உள்ள மானது வேகா நிற்கும் என்றவாறு.
ஆண் அன்றில் சிறிது மறைந்திருக்கும் அவ்வளவுக்கே ஆற்றாது பெண் அன்றில் வருந்திக் கூவுமாயின், என் காதலரைக் காணாமல் முற்றும் பிரிந்திருத்தலை யான் எங்ஙனம் ஆற்றமாட்டுவேன் என்று சகுந்தலை கூறினாள்; னித் தன் கணவனால் விலக்கப்பட்டுத் தான் தனியளாய் இருக்கப்போவது, இவளது தூயவுள்ளத்திற்கு முன்னமே தோன்றலாயிற்றென்பது இதனாற் குறிப்பிக்கப்படுகின்றது.
'சேவல்' என்பது பறவையில் ஆண்; 'பெடை' என்பது அதிற் பெண்; ‘மகன்றில்' என்பது அன்றிற் பறவையிற் பெண் என்பதும், அது தன் ஆணைவிட்டுப் பிரியாதென்பதும், பிரியிற் பெரிதும் ஆற்றாதென்பதும் “அடியோர் மைந்தர் அகலத்தகலா, அலர்ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி” என்னும் 8- ஆம் பரிபாடல் அடிகளாலும், “இறைவனுக்கு இரங்கியேங்கிச், சோர்துகில் திருத்தல் தேற்றாள் துணைபிரி மகன்றில் ஒத்தான்” என்னுஞ் சீவக சிந்தாமணிச் செய்யுள் (302) அடிகளாலும் நன்கு விளங்குகின்றன. பெண்அன்றில் காமவேட்கை மிகுதியும் உடைய தாகலிற் “காமருமகன்றில்” எனப்பட்டது. பூமரு பூவைமருவும், அஃதாவது கோதும். "புலம்பே தனிமை” என்பது தொல்காப்பியம் உரியியல்; தன் ஆணைப் பிரிந்து தனித்திருந்து வருந்துவதற்காயிற்று. 'வேகும்’ என்பது வேம் என இடைக்குறைந்தது.
―
நம்பிக்கைக் கட்டு - நம்பிக்கையால் உண்டாகிய பிணிப்பு. பொறிகள் - மெய் வாய் கண் மூக்குச்செவி என்னும் புறக் கருவிகள் ஐந்தும், இங்கே அக் கருவிகளின் வாயிலாக எழும் ஐந்து அவாக்களை உணர்த்தின. ஒத்த நன்குமதிப்பு மற்றவர்களைப் பாராட்டுவ தோடு ஒப்பப் பாராட்டுகை.
(பக். 77) பணி
-
-
தொண்டு. ஒழுகு -நட. 'நேசி' நேசன் என்பதற்குப் பெண்பால். வெகுண்ட கோபித்த. மாறாடாதே எதிர்பேசாதே. எவலாளர் - ஏவிய வேலை செய்வோர்.