________________
நூலாசிரியர்கள் வரலாறு. 13 பழைய இலக்கணவுரைகளில், 'கபிலபரணர்' என்று வழங்கு கிற தொகைநிலைத்தொடரால், பரணரென்பவருக்கும், திருவாலவா யுடையார் திருவிளையாடற்புராணத்தில் வந்துள்ள, "பின்னமில் கபிலன் றோழன் பெயரிடைக் காட னென்போன்" (உ0: க) என் னும் திருவிருத்தத்தால் இடைக்காடருக்கும் சிறந்த நட்பினராக இவர் எண்ணப்படுகிறார், வீரசோழியம், தொகைப்படலம், சு - ஆம் கட்டளைக்கலித்துறையுரையால், பரணருடன் இவர் வாது செய் இவர் வேறு; தொல்கபில தனரென்பது வெளியாகின்றது. ரென்பவர் வேறு. முதலிற் கூறுஞ் சினையறி கிளவி என்னும் தொல்காப்பி யச் சூத்திரத்திற்கு இளம்பூரணரும் சேனாவரையரும் எழுதிய வுரையால், கபிலராற் செய்யப் பெற்றதான கபிலமென்ற ஒரு நூலிருப்பதாகத் தெரிகின்றது. அ. அரிசில்கிழார்:-இவர், தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறையென்னும் அரசன்மீது இந்நூல் அ-ஆம் பத்தைப்பாடி ஒன் பதுநூறாயிரம் பொற்காசு பரிசில் பெற்றதன்றி அவன் கொடுத்த அரசாட்சிக்குரிய சிங்காதனத்தை அவனுக்கே மீட்டும் இரந்து கொ டுத்து அவன்பால் அமைச்சுரிமை பூண்டு விளங்கினார்; 'கிழார்' என்பது வேளாளர்க்கேயுரிய சிறப்புப்பெயராக இருந்ததென்று தெ ரிதலின், இவரை வேளாண் மரபினரென்று சொல்லவேண்டும்; இதனை, தொல்காப்பியம், மரபியல், எச-ஆம் சூத்திரத்தின் விசேட வுரையிற் காட்டிய பெயர்களாலும் திருத்தொண்டர்புராணவரலாற் றின் உ-ஆம் செய்யுளிலெடுத்துக்காட்டிய பெயர்களாலுமுணர்க. அரிசிலென்பது ஈண்டு ஒரு நதியின் பெயரோ ஒரூரின் பெயரோ யாதும் விளங்கவில்லை. சோழநாட்டிலுள்ள நதிகளுள் அரிசிலென்று ஒரு நதியும் மைஸூரைச்சார்ந்த ஊர்களுள் அரிசிற்கரையென்று ஒரூரும் உள்ளன. [கிழார் - உரியவர்.) தகடூரெறிந்து வையாவிக்கோப் பெரும்பேகனால் துறக்கப்பட்ட கண்ணகியை அவனுடன்சேர்த்தல்வேண்டி இவர் அவனைப்பாடினர் ; அதிகமான் வீழ்ந்த எழினியென்பவனுடைய பிரிவாற்றாது வருந்திப் புலம்பினர் ; தகடூர்யாத்திரை யென்னுநூலில் அவ்வச்சம யங்களில் இவர் செய்தனவாகச் சிலபாடல்களுண்டென்று தெரி கிறது. [தொல், புறத்திணை, அ, கஉ - ஆம் சூ. ந - உரை.]