உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உஉ பதிற்றுப்பத்து. படும் தோற்றமிலராயினுமெனவும் வல்லாராயினுமென்றதற்கு மாட்டாராயினுமெனவு முரைக்க. ஒருகல்வி யாவராயினு மென்றவும்மை இழிவுசிறப்பு; வல்லாராயினுமென்ற வும்மை எதிர்மறை (கO) நடந்து (கங) கடந்து (கச) நிறீஇ (க௯) வீசியென நின்ற வற்றை (உங) நெஞ்சினனென்னு முற்றுவினைக்குறிப்பொடு முடிக்க, உகூ. வயிறுபசிகூரவீயலனென மூன்றாவதும் கொடைகூறியதற்கு மழைபெய்யா விளைவில்காலைத் தன் பரிகரமாயுள்ளார்க்கு அவர்கள் பசித்து வருந்தாமல் வேண்டும்பொழுதுகளிலே வேண்டுவன கொடுக்குமென்று ஒருகொடைநிலையாக வுரைக்க. (க) நுங்கோ யாரெனவினவின் எங்கோ, (ரு) சேரலாதன், அவன் கண்ணிவாழ்க; அவனியல்பிருக்குமாறுசொல்லின், (எ) மாற்றோர் தேஎத்து மாறியவினையே (௬) வெயிற்றுகளனைத்தும் வாய்த்தலறியான்;(கூ) பொய்த்த லறியான்; (உo) அட்டுமலர்மார்பன், (௩) கொடைக்கடனமர்ந்த கோடாநெஞ்சினன் ; கோடையிடத்து (உரு) எழிலிதலையாதாயினும் (உகூ) வயிறுபசிகூரவீயலன்; ஆதலான், (உஎ) அவனையின்றதாய் வயிறுவிளங்கு வாளாகவென் வினைமுடிவுசெய்க. இதனாற்சொல்லியது, அவன்றன் செல்வப் பொலிவுகண்டு நீ யாரு டையபாணனென்று வினவியாற்கு யான் இன்னாருடையேனென்று சொல்லிமுடிக்க, அவன்குணங்களின்னகூறிப் பின்னவனை வாழ்த்தி முடித்த வாறாயிற்று. (உ) 'இருமுந்நீர்' எனவும், (௩) 'முரணியோர்' எனவும், (கஎ) 'கடி மிளை' எனவும், (கஅ) 'நெடுமதில்' எனவுமெழுந்த நான்கடியும் வஞ்சி யடியாகலான், வஞ்சித்தாக்குமாயிற்று. க0.- கனவினுமென்பது கூன். (பி - ம்.) க0. ஓங்குநடந்து. ஒருங்குநடந்து. உக. எமக்கும். (க0) இதன்பதிகத்து, அகப்படுத்தியென் றவாறு. யவனர்ப்பிணித்தென்றது. யவனரைப் போருள் நெய் தலைப்பெய்து கை பிற்கொளீஇ யென்பதற்கு, அக்காலத்துத் தோற்றாரை நெய்யைத் தலையிற்பெய்து கையைப் பிறகு பிணித்தென் றுரைக்க. அருவிலைநன்கலம் வயிரமொடுகொண்டென்றது அந்த யவனரைப் பின்தண்டமாக அருவிலைநன் கலமும் வயிரமுங்கொண்டென்றவாறு.