உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ககஅ பதிற்றுப் பத்து. (பதிகம்) மடியா வுள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த நெடுநுண் கேள்வி யந்துவற் கொருதந்தை யீன்றமகள் பொறையன் பெருந்தேவி யீன்றமக னாடுபதி படுத்து நண்ணா ரோட்டி வெருவரு தானை கொடுசெருப் பலகடந் தேத்தல் சான்ற விடனுடை வேள்வி யாக்கிய பொழுதி னறத்துறை போகி மாய வண்ணனை மனனுறப் பெற்றவற் கோத்திர நெல்லி னொகந்தூ ரீத்துப் புரோசு மயக்கி மல்ல லுள்ளமொடு மாசற விளங்கிய செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கபிலர்பாடினார். பத்துப் பாட்டு. அவைதாம்: புலா அம்பாசறை, வரைபோலிஞ்சி, அருவி யாம்பல், உரைசால்வேள்வி, நாண்மகிழிருக்கை, புதல்சூழ்பறவை, வெண்போழ்க்கண்ணி, ஏமவாழ்க்கை, மண்கெழுஞாலம், பறைக் குரலருவி. இவை பாட்டின்பதிகம். பாடிப்பெற்றபரிசில்: சிறுபுறமென நூறாயிரங்காணங்கொடுத்து நன்றாவென்னும் குன்றேறிநின்று தன்கண்ணிற்கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ. செல்வக்கடுங்கோவாழியாதன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான். ஏழாம்பத்து முற்றிற்று.