________________
கஉo உ. பதிற்றுப் பத்து. தூக்கு - செந்தூக்கு. பெயர் - (கஉ) குறுந்தாண்ஞாயில். அருவியாம்பல் - நீரின் ஆம்பல்; என்றதனாற்பயன்: நீர்க்குறை வற்ற ஆம்பலென்பதாம்; எண்ணின் ஆம்பலை நீக்குதற்கென்பதுமொன்று. (உ) ஆம்பலொடு நெய்தலொடு (ச) நெல்லை (உ) அரிந்தென்று கொள்க. (உ) அரிந்து (ச) பகடு உதிர்த்தவெனக்கூட்டிப் பகட்டானென உருபு விரிக்க. 15. செறு வினை மகளிர் மலிந்த வெக்கையென்றது உழவர்பெண் மக்கள் விளையாடு தற்கு வயலிற் பயிர்கொள்ளாததோரிடமின்மையின், ஆண்டு அவர்கள் மிக்க களமென்றவாறு. வெக்கை - கடாவிடுங்களம். நெல்லிற்கு மென்மை - சோற்றதுமென்மை. செந்நெலென்றது செந்நெலென்னும் சாதியை. ரு. அளவைக்கென நான்காவதுவிரிக்க. சூ. கடுந்தேறு உறுகிளை-கடிதாகத் தெறுதலையுடைய மிக்க குளவி யினம். மொசிந்தனவென்றது. மொய்த்தனவாயென்னும் வினையெச்சமுற்று. கூ. உருத்து எழுந்து உரைஇ ஊர் எரி கவரவெனக்கூட்டுக. (5) ஊரெரிகவரப் (கO) போர்சுடுகமழ்புகை மாதிரமறைப்பத் (கங தோட்டிவெளவியென முடிக்க. கக. தோன்றலீயாதென்றது தோன்றாதென்னும் வினையெச்சத் திரிசொல்; தோன் றலீயாமலெனத்திரிக்க. கஉ. குறுந்தாண்ஞாயிலென்றது இடையிடையே மதிலின் அடி யிடங்களைப்பார்க்க அவற்றிற் குறுகிக் குறுகியிருக்கும் படியையுடைய ஞாயி லென்றவாறு, இவ்வாறு கூறின சாதிப்பண்பானும் படியைத்தாளென்றுகூறின படி யானும் இதற்கு, 'குறுந்தாண்ஞாயில்' என்று பெயராயிற்று. கங வெளவினை யென்றது வினையெச்சமுற்று கச. ஆயம் தரீ இயென்றது ஆயங்களை நீ (கரு) புலவுவில்லிளையர்க் குக் கொடுப்பவென்றவாறு. தரீ இயென்பதனைத் தரவெனத்திரிக்க கரு. இளையர் அங்கை விடுப்பவென்றது இளையர் அவ்வாயத்தைத் தங்கள் அங்கையில் நின்றும் பிறர்க்கு விடுப்பவென்றவாறு. கசு. கயிறாடாவென்னும் பெயரெச்சமறையை - வெகலென்னும் தொழிற்பெயரொடுமுடிக்க, வைகல் - கழிதல்; வைகற்பொழுது, இருபெய ரொட்டுமாம்.