உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

184 இரத்தக் கண்ணீர் 1 சாமி. சாமியாக தைப் பாதுகாக்கும் தாய் - மத வெறிக்கு விசிறி வீசும் தகப்பன் ! பத்தினியாக வேஷம் போட்டாள் தாய் / பக்தனாகக் கூத்தாடினான் தகப்பன்! கற்பிழந் வாழ் தவள் கன்னிகையானாள். கிறான். ஏன்? ஏன் ? என் ரத்தக் கண்ணீரைக் கேளுங்கள் பதில் சொல்லும்! போலி கௌரவம்- போலி பக்தி இவை இரண்டையும் கேலி செய்கிறது சுருக்கு மாட்டப்பட்டு சாய்ந்த என் முத்தனின் பிணம் ! மதிப்பு கெடக்கூடாது - மகன் கெட்டாலும் பரவாயில்லை என்பவள் மாதாவாம் - மக்கள் ஆதரவு மகான் என்ற பெயர் மாறக் குறையக்கூடாது கூடாது மகனைப்பற்றி கவலையில்லை யென்றவன் இந்த மகா நல்லவர்கள் மருமகளை அழைக்க வந்திருக்கிறார்கள் - மானங்கெட்டவர்கள் ப க்கெல்லாம் உங்களு பதில் சொல்ல என் முத்தன் உயிரோடு இல்லை. இன்று இல்லாவிட்டால் நாளை உங்களுக்கு மட்டுமல்ல - உங்களைப் போன்ற உலுத் தர்களுக்கு, பதில் சொல்ல என் வயிற்றிலே வளரு கிறது வாள் ! போலி மதிப்பைப் பொசுக்கும் தீ! மக்களை ஏமாற்றி வாழும் மதயானைகளை மாய்க்கும் வேல்! என் வயிற்றிலே வளரு கிறது - அது சொல் லும்; சூதுக்காரர்கட்குப் பதில் ! சூழ்ச்சிக்காரர்கட் குப் பதில்! சூடான பதில் - சுயமரியாதை பதில் ! பிதாவாம் அந்தப் பதிலுக்குக் காத்திருங்கள் ! பாவிகளே! என் முத்தனை அநியாயமாகக் கொன்ற பாவிகளே! அந்தப் பதிலுக்குக் காத்திருங்கள்! இப்போது போய்விடுங்கள் இதைவிட்டு- முத்தாயியின் கனலும், புனலும் நிறைந்த கண்களுக்கு முன்னே நிற்கமுடியாமல் பலதேவர் குடும்பமும் சாமியாரும் தலைகுனிகிறார்கள்.