உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி காட்சி 51] 157 (வேதாளத்தின் இருப்பிடம் சுகதேவ் எங்கேயோ போய்விட்டு வந்து கதவைத் தட்டுகிறான். உள்ளே வேதாளம். தாடி ஒட்டிக் கொண்டிருக்கிறான், அருகே வெற்றிவேலனும் அமர்ந்திருக்கிறான். சுகதேவ்: சாமீ! சாமீ!! வேதாளம்: பொறு! இன்னும் நிஷ்டை முடியவில்லை. சுகதேவ்: கதவைத் திறவுங்கள் சாமி ! வேதாளம்: மூடபக்தா இரு! கடவுளுடன் பேசிக்கொண் டிருக்கிறேன்; முத்தாயி விஷயம் பற்றி!-

சுகதேவ்: (தனக்குள்) ஆகா-கடவுளோடு பேசுகிறாரா?- நாம்தான் பகவானைப் பார்க்க முடியாது: பாப ஆத்மா! சாமியார் பேசும்போதாவது ரகசியமாகப் பகவானைப் பார்த்து விடுவோமே!- என்று சொல்லிக் கொண்டே கதவின் ஓட்டை வழியாக உள்ளே பார்க்கிறான். அவ் வளவுதான் அவனுக்குத் தூக்கிவாரிப் போடு கிறது. நான் சுகதேவ்: அய்யய்யோ தளபதி ! வேதாளம், மறுபடியும் முருக்கமரம் ஏறுகிறது நல்ல வேளை பிழைத்தேன் - பிழைத்தேன். என்று அலறியபடி அதைவிட்டு ஓடுகிறான்.