உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி 90 155 காட்சி 50] [சுமதி வீடு முத்தாயியைக் காப்பாற்றிய பெண் சுமதி- முத்தாயி இருவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சுமதி: முத்தாயி! உன்னுடைய கதையைக் கேட்கவே பயமாயிருக்கிறது. ஆனால் -இனிமேல் நீ எதற்கும் பயப்படவேண்டியதில்லை... நீங்களிருவரும் என் வீட் டிலேயே பத்திரமாக இருக்கலாம். முத்தாயி: சுமதீ... நீ இங்கு எப்படி வந்தாய்?- சொல்ல மாட்டாயா? சுமதி: இதோ பார். --எப்படி வந்தேன் என்று தெரி கிறதா? (கழுத்திலுள்ள தாலியை எடுத்துக் காட்டு கிறாள்) முத்தாயி: அடி என் கண்ணே ! உனக்குக் கல்யாண மாகி விட்டதா? எங்கே உன் கணவர்? சுமதி: அவருக்கு உடல்நலமில்லை. மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவரைப் போய்ப் பார்த்து விட்டுத் திரும்பும் வழியில்தான் உன்னை அந்த நிலை மையில் கண்டேன். முத்தாயி: - மணமாகி மஞ்சள் கயிறுகூட புதிதாக இருக்கிறது! அதற்குள் அவருக்கு உடல் மில்லையா?

நல் து சுமதி: ஆமாம் - அவர் ஒரு சிற்பி - கோபுரத்தின் மீ ஏறி சிற்பவேலை செய்யும்போது கால் தவறிக் கீழே விழுந்து படுகாயமடைந்து விட்டார் இப்போது சிறிது நலம்.