27 முதலாம் இராஜேந்திரனுக்குப்பின் அவன் மக்க ளான இராஜாதிராஜன், இரண்டாம் இராஜேந்திரன் என்ற இராஜேந்திரன் தேவன், வீர ராஜேந்திரன் ஆகிய மூவரும் பட்டத்துக்குவந்தனர். இவர்கள் மேலைச் சாளுக்கியரை வென்று சோழப்பேரரசின் பெருமையை நிலைநாட்டிய வீரர்களாவர். வீர சோழியம் என்ற இலக் கண நூலும், வீரசோழன் ஆறும் கங்கைகொண்ட சோழபுரத்திற்குத் தென் கிழக்கேயுள்ள வீரசோழபுரம் என்ற ஊரும், வீராணம் ஏரி என மருவி விழங்கி வரும் வீர சோழன் ஏரியும் வீரராஜேந்திரன் புகழை நிலை நிறுத்தி வருகின்றன. கோதாவரி கிருஷ்ணை ஆகிய பேராறுகள் இரண்டுக் கும் இடைப்பட்ட பகுதியைக் கீழைச்சாளுக்கியர் ஆண்டனர். அவருள் ஒருவனான விமலாதித்தனுக்கு முதலாம் இராஜராஜன் தன் மகள் குந்தவையை மணஞ்செய்துவித்தான். இவர்களுக்குப்பிறந்த இராஜ ராஜ நரேந்திரன் முதலாம் இராஜேந்திரன் மகளை மணந்து கொண்டான். இவ்விருவர்க்கும் பிறந்தவனே வரலாறு புகழ்பாடும் முதற்குலோத்துங்கன். இவனை, "சாளுக்கியச் சோழன் என்று வரலாற்று நூல் வல்லோர் வருணிப்பது வழக்கம். 99 முதற்குலோத்துங்கன் று இம் காலம் 1070 முதல் 1118 வரை ஆகும். இந்நாளில் ஒரிசா என்று குறிக்கப் படும் கலிங்கநாட்டை இவன் வென்றான்; இவ்வெற்றி யைச் சிறப்பிக்க எழுந்த இலக்கியமே கலிங்கத்துப் பரணி என்பது. பல பகுதிகளை வென்று தன் ஆட்சி யின் எல்லையை விரித்தபோதிலும், முதற் குலோத்துங் கன் தன் இறுதிக்காலத்தில் தமிழ்நாடல்லாத பிற பகுதி களையெல்லாம் விடுவித்து, அடக்கமான நாட்டை அமை தியான நிலையில் அவன் பின்னோருக்கு அளித்துச்
பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/28
Appearance