45 பேட்டை, அய்யங்கடை என்பன இவ்வாறே, கோவிந்த தீட்சிதர் பெயரால் தஞ்சை அரசர்களால் அமைக்கப் பெற்றவை. ஐயன் என்பது கோவிந்தய்யர் கோவிந்த தீட்சிதரைக் குறிக்கும். என்ற புகழ்பெற்ற பல திருவிழாக்களும் இம்மாவட்டத்தில் நடைபெறுகின்றன. அவை யாவன : மாசிப் பௌர்ணமி யில் 12 ஆண்டுகளுக்கொரு முறை கும்பகோணத்தில் நிகழும் மாமாங்கம், மாயூரத்தில் ஐப்பசி மாதத்தில் நடை பெறும் துலா உற்சவம், திருவையாற்றில் சப்த தல விழா, காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெறும் பட்டினத்தார் திருவிழா, திருவாரூரில் பங்குனி உத்தரமும் கமலாலயத் தெப்பத் திருவிழாவும், கும்பகோணம் கோயில்களி லுள்ள நவகன்னிகைகளைக் காசி விசுவநாதர் கோயிலுக் குக் கொண்டுவரும் திருவிழா முதலியவை. . இவை தவிர, ஆடி 18-இல் பதினெட்டாம் பெருக் கும் ஆதீனங்களில் நடைபெறும் பட்டினப் பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளும் காணத்தக்கவை. ஒவ்வொரு வகையான கோயில்களிலும் இம்மாவட் டத்தில் குறிப்பிடத்தக்க கோயில்கள் உள்ளன. தேவா ரப் பாடல் பெற்ற 165 தலங்களும் வைணவ ஆழ்வார்கள் மங்களா சாசனம் பெற்ற 33 தலங்களும் திருப்புகழ் பெற்ற 15 தலங்களும் இருக்கின்றன. சமயம் சைவத்தில் ஒரு பிரிவான காரனேசுவரச் தமிழ்நாட்டில் தஞ்சையில் மட்டுமே பரவியிருக்கிறது. இம்மாவட்டத்தில் நாகைக் காரோணம், குடந்தைக் காரோணம், (கருணாசாமி கோயில் எனப்படும்) கரந்தைக் காரோணம் ஆகிய மூன்று காரோணங்கள் உள்ளன. அம்மன் கோயில்களும் அளவில. தஞ்சை, ஒழுக மங்கலம், வீரசிங்கம்பேட்டை, சாக்கோட்டை, வலங்கை மான் ஆகிய ஊர்களில் மாரியம்மன் கோயில்களும், மகா
பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/46
Appearance