49 அறந்தாங்கி வட்டத்தில் இருக்கிறது. தரங்கம்பாடிக்குத் தென்மேற்கேயுள்ள திருவிடைக்காளி என்னும் சிற்றூரே பெரிய புராணம் குறிப்பிடும் போதிமங்கலம் ஆகும்; இவ்வூரருகேயுள்ள பெருஞ்சேரியில் பௌத்த விக்கிரகங் கள் காணப்படுகின்றன. பழையாறை நகரும் பௌத்த சமயப் பீடமாக இருந்தது என்பர். இம் மாவட்டத்திற்கும் பெளத்த சமயத்திற்கும் உள்ள தொடர்புகளை வலியுறுத்தும் நிலையில் ஏராளமான பௌத்த விக்கிரகங்கள் இங்கே கண்டெடுக்கப்பெற்றன. இவற்றில் சிலவற்றைப் பற்றிய விவரம் அடுத்த பக்கத் தில் காண்க. பிறமதங்கள்: இஸ்லாம், கிறித்தவம் ஆகிய இரண்டு மதங்களும் நாயக்க மன்னர்கள் மகாராட்டிர மன்னர்கள் காலங்களில் தஞ்சை மாவட்டத்தில் பரவின. அந்த அரசர் கள் மதப்பற்றுடையவர்களாக இருந்தபோதிலும் மத வெறியர்களாக இல்லை. இன்று தஞ்சை நகரில் கிறித்த வர்கள் இருக்கும் இடங்கள், கோயில் கட்டியுள்ள இடங் கள் யாவும் அவர்களுக்குத் தஞ்சை மகாராட்டிர அரசர் களால் அன்பளிக்கப்பட்டவையே ஆகும். இவ்வாறே தஞ்சை இரயில் நிலையத்திற்கும் மணிக்கூண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் பல இடங்கள் மகாராட்டிர அரசர்களால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பெற்றன. மாவட்டமெங்கும் முஸ்லிம் நிறுவனங்களுக்குப் இடங்கள் "தைகா" (முற்றூட்டு நிலங்களாக) வழங்கப் பெற்றிருக்கின்றன. பல கிறித்தவம்: இந்தியாவில் நான்கு வாயில்கள் வழி யாகக் கிறித்தவமதம் பரவிற்று. மேற்குக் கரையிலுள்ள கோவா, கேரளத்திலுள்ள கிராங்கனூர், வங்காளத்தி லுள்ள செராம்பூர், தஞ்சை மாவட்டத்திலுள்ள தரங்கம் பாடி ஆகிய நான்குமே இவ்வாயில்களாவன, தரங்கம்
பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/50
Appearance